திருவண்ணாமலை மாவட்டத்தில் நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட
சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்க்காணல் வரும்
24, 25, 26-ம் தேதிகளில் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன்
தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புதவற்கான விண்ணப்பங்கள் ஏற்கெனவே பெறப்பட்டன.தொடர்ந்து, தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பிப்ரவரி 11, 12, 15, 16-ம் தேதிகளில் நேர்க்காணல் நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்த நேர்க்காணல் நிர்வாகக் காரணங்களால் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், தள்ளிவைக்கப்பட்ட அனைத்து ஒன்றியங்களிலும் மீண்டும் நேர்க்காணல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு வரும் 24, 25-ம் தேதிகளிலும், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு வரும் 26-ம் தேதியும் மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களிலும் நடைபெறும்.எனவே, இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து நேர்க்காணல் கடிதம் கிடைக்கப்பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த நேர்க்காணலில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...