சி.ஆர்.பி.எப்.,
எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையில், 229 காலிப் பணியிடங்களுக்கு,
'ஆன்லைன்' மூலம் ஆட்கள் தேர்வு நடந்து வருகிறது.இதுகுறித்து,
சி.ஆர்.பி.எப்., கமாண்டன்ட் தினகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தேசிய
அளவில், ஏ.எஸ்.ஐ., எனப்படும், உதவி சப் - இன்ஸ்பெக்டர் பணியிடங்களில்
பணிபுரிய, பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்கு, பிளஸ் 2
தேர்ச்சி பெற்ற, ௧௮ - ௨௫ வயதுக்கு உட்பட்ட ஆண் மற்றும் பெண்கள், www.crpfindia.in என்ற
இணையதள முகவரியில், நேரடியாக மனு செய்யலாம். தமிழக மனுதாரர்களுக்கு
தேர்வு, பிப்., ௧ம் தேதி முதல், மார்ச் ௧ம் தேதி வரை நடத்தப்படும்.இவ்வாறு
அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...