Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2016 - 17 அதிமுக அரசின் இடைக்கால பட்ஜெட்டின் சிறப்பு அம்சம்!

2016-17ம் ஆண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அதன் பிறப்பு அம்சங்கள் வருமாறு:



* காவேரி நடுவர்மன்ற தீர்ப்பு அரசிதலில் வெளியானது.

* ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவி தாலிக்கு தங்கம்.

* நெசவாளர்களுக்கு 10,000 பசுமை வீடுகள் வழங்கியவர் முதலமைச்சர்.

* பொருளாதார வளர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது.

* இலங்கைத் தமிழர் நலன்களுக்காக பாடுபடுகிறது தமிழக அரசு.

* தமிழ்மொழி வளர்ச்சிக்காக ரூ.32.74 கோடி நிதி ஒதுக்கீடு

* நீதி நிர்வாகத்துக்கு ரூ.985.51 கோடி ஒதுக்கீடு, வருவாய்துறைக்கு ரூ.5,974 கோடி ஒதுக்கீடு.

* மகாமகம் சிறப்பாக நடைபெற 135 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

* தமிழக காவல்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.6,099 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* தமிழக வேளாண்துறைக்கு ரூ.6,938.57 கோடி, கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ.1,188.88 கோடி ஒதுக்கீடு

* அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கு திருத்திய கருத்துரு அனுப்பப்படும். திட்டத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் உடனே தொடங்கப்படும்.

* தீயணைப்பத்துறைக்கு 227 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

* முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி சாதனை படைத்தது.

* 5 ஆண்டுகளில் அமைதியை நிலைநாட்டி வளர்ச்சிக்கு வித்திட்டது அஇஅதிமுக அரசு.

* உணவு பாதுகாப்பில் உறுதி செய்ய திட்டங்கள். உணவு பாதுகாப்பை உறுதி செய்ய விலையில்லா அரிசி.

* விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட திட்டங்கள்.

* மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டிகள்.

* மாணவ- மாணவிகளுக்கு ஊக்கத்தொகை விலையில்லா புத்தகங்கள்.

* மின்மிகை மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது.

* மின்மிகை மாநிலமாக மாற்றிய பெருமை முதலமைச்சரையே சேரும்.

* இலங்கை பிரச்னையில் சர்வதேச கவனத்தை ஈர்த்தவர் முதலமைச்சர்.

* மாநிலமே மகிழும் வண்ணம் வளர்ச்சி தந்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா.

* புதுமைகள் பல படைத்து  பெருமை பெற்றவர் முதலமைச்சர் ஜெயலலிதா.

* எதிரிகளால் வெல்ல முடியாத மக்கள் சக்தியாக விளங்குகிறார் முதலமைச்சர் ஜெயலலிதா.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive