Home »
» 13 மாவட்ட 'டயட்' பொறுப்பு முதல்வர்களுக்கு பதவி உயர்வு
தமிழகத்தில் 13 மாவட்ட கல்வியியல் மற்றும்
பயிற்சி நிறுவன (டயட்) 'பொறுப்பு' முதல்வர்கள் 13 பேர் முதல்வர்களாக பதவி
உயர்வு பெற்றனர். இடைநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி பள்ளிகள் மற்றும்
ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளிக்கும் வகையில் மாநிலம் முழுவதும்
13 இடங்களில், மாவட்ட கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன.
இவற்றில் ஓராண்டாக சீனியர் விரிவுரையாளர்கள் தான் 'பொறுப்பு' முதல்வர்களாக
இருந்தனர்.
இவர்களின் பதவி உயர்வுக்கான
பணிமூப்பு பட்டியல் தயார் நிலையில் இருந்தும், பதவி உயர்வு அறிவிப்பில்
இழுபறி நீடித்தது.ஒரே நாளில் அவர்கள் அனைவருக்கும் முதல்வர்களாக பதவி
உயர்வு அளித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன
இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டார்.அவர்கள் விவரம்: புகழேந்தி
(மதுரை), சாந்தி (தேனி), ரஞ்சனி (ராமநாதபுரம்), கோல்டா கிளாரா ராஜாத்தி
(நெல்லை), செந்தில் (துாத்துக்குடி), பிரபா தேவன் (கன்னியாகுமரி),
வின்சென்ட் டிபால் (திருச்சி), செல்லத்துரை (புதுக்கோட்டை), பெரியசாமி
(கரூர்), மணி (தர்மபுரி), விஜயகுமார் (சேலம்), அன்பழகன் (கடலுார்), மணி
(சென்னை மாநில கல்வியியல் பயிற்சி நிறுவன துணை இயக்குனர்).
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...