கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.126 கோடியே 94 லட்சத்து 34 ஆயிரத்து 368
மதிப்பில் மாணவர், மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக
ஆட்சியர் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2011 ஆம் ஆண்டு முதல் 2016 வரை அரசு மற்றும்
அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 79,141 மாணவர், மாணவிகளுக்கு ரூ. 118
கோடியே 28 லட்சத்து 93 ஆயிரத்து 977 மதிப்பில் விலையில்லா மடிக் கணினிகள்,
6 லட்சத்து 42 ஆயிரத்து 995 மாணவர், மாணவிகளுக்கு ரூ. 3 கோடியே 85
லட்சத்து 79 ஆயிரத்து 700 மதிப்பில் விலையில்லா பாடநூல்கள், 3 லட்சத்து 94
ஆயிரத்து 322 மாணவர், மாணவிகளுக்கு ரூ. 5 கோடியே 91 லட்சத்து 48 ஆயிரத்து
300 மதிப்பில் பாடக் குறிப்பேடுகள், 6 ஆயிரத்து 140 மாணவர், மாணவிகளுக்கு
ரூ. 2 கோடியே 12 லட்சத்து 42 ஆயிரத்து 91 மதிப்பில் விலையில்லா
மிதிவண்டிகள், 6 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் 2 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்,
மாணவிகளுக்கு தலா 4 செட் வீதம் வண்ணச் சீருடைகள் உள்பட 14 வகையான கல்வி
உபகரணங்கள் ரூ.126 கோடியே 94 லட்சத்து 34 ஆயிரத்து 368 மதிப்பில்
வழங்கப்பட்டுள்ளன என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...