கிராம நிர்வாக அலுவலர் என்ற, வி.ஏ.ஓ., பதவிக்கான எழுத்துத்தேர்வு, இன்று
நடக்கிறது. இதில், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.தமிழக
வருவாய் துறையில், காலியாக உள்ள, 813 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில்,
எழுத்துத்தேர்வு அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்வு, இன்று தமிழகம் முழுவதும், 244 இடங்களில்,3,466 மையங்களில் நடக்கிறது. தேர்வில், 10 லட்சத்து, 27 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். சென்னையில் மட்டும், 77 ஆயிரம் பேர், 250 தேர்வு மையங்களில், இந்ததேர்வை எழுதுகின்றனர். இந்த முறை, வி.ஏ.ஓ., தேர்வில், எந்த விதமான முறைகேடும் நடக்காமல் இருக்க, வினாத்தாளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஏ.பி.சி.டி., என்ற நான்கு வகைகளில் வழங்கப்பட்ட வினாத்தாள்கள், இந்த முறை, பதிவு எண் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது. இதனால், ஒரு தேர்வு அறையில் யாருக்கு, எந்த வகை வினாத்தாள் வரும் என்பதை கணிக்க முடியாது.தேர்வர்கள், சைகை அடிப்படையில், 'அப்ஜெக்டிவ்' வகை வினாக்களுக்கு, மற்ற நபர்கள் மூலம், விடையை தெரிந்து கொள்ள முடியாது. டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள், பறக்கும் படை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...