தமிழக முதல்வர் கரங்களில் 3300 ஆசிரியர்களின் 2016...!!!
கருப்பு ஆண்டாக 2016 மாறக்கூடாது என வேண்டுதலில் சுமார் 3300 பணியிலுள்ள பட்டதாரி ஆசிரியர்கள்.. தமிழக கல்வித் துறை கொடுத்துள்ள தகவல் அறியும் உரிமை சட்ட
விபரக்குறிப்பில் தெளிவாக தெரிவது ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது போட்டித்
தேர்வு அல்ல.. தகுதியான ஆசிரியர்களை பணி நியமனம் செய்யவே என்பதாகும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பணியில் சேர்ந்து (மன சங்கடத்திலும்
கூட) நிறைவான தேர்ச்சி விழுக்காட்டினை தந்து கொண்டுள்ள இந்த
ஆசிரியர்களில்... ஆசிரியர் தகுதித் தேர்வைக் காரணம் காட்டி அவர்களுக்கு
நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகள் கூட மறுக்கப்பட்ட நிலையிலும் பணியாற்றி
வருகின்றனர்.
பல கல்வி மாவட்டங்களில் இதுவரை ...
ஒரு சில ஆசிரியர்களுக்கு...
* வளரூதியம் இல்லை.
* ஊக்க ஊதியம் இல்லை.
* மேல் படிப்புக்கு அனுமதி இல்லை.
* தகுதிகாண் பருவம் முடிக்க ஒப்புதல் இல்லை.
* மருத்துவ விடுப்புக்கு அனுமதி இல்லை.
* பணிப்பதிவேடு (SR) துவங்கவில்லை.
* ஈட்டிய விடுப்பு பலன் இல்லை.
* பங்கீட்டு ஓய்வு ஊதிய திட்ட எண் பெற இயலவில்லை.
* கடன் பெறக்கூட பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஊதிய சான்று தர மறுப்பு.
* வரையறை விடுப்பு இல்லை.
₹ மிகவும் கொடுமை இதில் யாதெனில் பணியில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை ஒரு சில ஆசிரியர்கள் ஊதியமே பெறாமல் இன்றும் பணியில் உள்ளனர்.
இவை எல்லாவற்றிலும் மேலாக தகுதியற்ற ஆசிரியர்கள் என ஒரு சில
பள்ளிகளின் மூத்த ஆசிரியர்களால் எள்ளி நகையாடப்படும் சூழலும் உண்டு என்பதை
மறுப்பதற்கு இல்லை.
தமிழக முதல்வர் இவர்களின் பிரட்சனைகளை உள்ளார்ந்து பார்க்கும்
நிலையில் பணியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி பட்டதாரி
ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து முழு விலக்கு அளிப்பது
மட்டுமே ஒரே தீர்வு என்பது உண்மை.
இவர்களின் ஒட்டுமொத்த ஒரே நம்பிக்கை தமிழக அரசின் கல்வி
சார்ந்த கொள்கை முடிவில் மறு பரிசீலனை செய்து பணியில் உள்ள இந்த 3300
பட்டதாரி ஆசிரியர்களின் எதிர்காலத்தை கருணை உள்ளத்துடன் பார்த்து ஒரு
அரசாணை பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுகின்றனர்.
இந்த 2016 ஆம் ஆண்டு இவ்வகையான ஆசிரியர்களுக்கு கருப்பு
ஆண்டாக மாறாமல் வெளிச்ச ஆண்டாக மாற்றம் பெறுவது தற்போதைய தமிழக அரசின்
கருணையில் தான் உள்ளது.
ஆக்கம்:
- தென்னகக் கல்விக் குழு.
- தென்னகக் கல்விக் குழு.
விரைவில் தமிழக அரசின் கருணைப் பார்வை படட்டும்... புத்தாண்டு உங்களுக்கு பிரகாசமான முறையில் அமையும்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
விரைவில் தமிழக அரசின் கருணைப் பார்வை படட்டும்... புத்தாண்டு உங்களுக்கு பிரகாசமான முறையில் அமையும்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
சார் நான் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன். அன்புடன் சு.முருகன் கொழப்பலூர். இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteVarushathai veenaakka veandaam.... No Trb .. No tet exam..P.g.varaadhu... Bears vealaiyai paarunga......May Ku piragu pudhoya Saatchi amaindhu nilamai seeraaga one year aagum....Tnpsc and upsc rrb bank exam eazhudhunga...nalla vaaipu...vaadhiyaar vealaidhaan vaelaiyaa?.....
ReplyDeletedont worry
ReplyDelete