Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET நிபந்தனைகளுடன் 23/08/2010 க்குப் பிறகு பட்டதாரி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்கள் கவனத்திற்கு...

       ஆசிரியர் தகுதித் தேர்வு நிபந்தனைகளுடன் 23/08/2010 க்குப் பிறகு பட்டதாரி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களாக  பணியில் சேர்ந்தவர்கள் கவனத்திற்கு...

நம் கூடுகை நாள்: 09/01/2016 சனிக்கிழமை. காலை: 10 மணி.
இடம்: கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள பூங்கா
தமிழக முதல்வர் தவிர நமக்கு தற்போது வேறு வழியே இல்லை...
தமிழக கல்வித் துறை கொடுத்துள்ள தகவல் அறியும் உரிமை சட்ட விபரக்குறிப்பில்  தெளிவாக தெரிவது ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது போட்டித் தேர்வு அல்ல...
தகுதியான ஆசிரியர்களை பணி நியமனம் செய்யவே என்பதாகும்.
கடந்த 2½ ஆண்டுகளாக         ஆசிரியர் தகுதி தேர்வு தமிழகத்தில் நடத்தப்படாமல் இருந்த நிலையிலும் கூட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 23/08/2010 க்கு பிறகு பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தம் தகுதியை முழுவதும் நிரூபித்துக் காட்டியும் தமிழக அரசின் கருணைக் கடைக்கண் பார்வை படவில்லை என்ற மன கஷ்டத்தில் இந்த 2016 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளோம்.
காரணம் 2016 நவம்பர் 15 ஆம் நாளுக்கு பிறகு நம் நிலை...
? கேள்விக்குறி ?
இதை கடந்த பல நாட்களாக பல  ஊடகங்கள் நினைவுபடுத்தி வருகின்றன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பணியில் சேர்ந்து (மன சங்கடத்திலும் கூட) நிறைவான தேர்ச்சி விழுக்காட்டினை தந்து கொண்டுள்ள  நாம்... ஆசிரியர் தகுதித் தேர்வைக் காரணம் காட்டி நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகள் கூட மறுக்கப்பட்ட நிலையிலும் பணியாற்றி வருகின்றோம்
பல கல்வி மாவட்டங்களில் இதுவரை ...
ஒரு சில ஆசிரியர்களுக்கு...
* வளரூதியம் இல்லை.
* ஊக்க ஊதியம் இல்லை.
* மேல் படிப்புக்கு அனுமதி இல்லை.
* தகுதிகாண் பருவம் முடிக்க ஒப்புதல் இல்லை.
* மருத்துவ விடுப்புக்கு அனுமதி இல்லை.
* பணிப்பதிவேடு (SR) துவங்கவில்லை.
* ஈட்டிய விடுப்பு பலன் இல்லை.
* பங்கீட்டு ஓய்வு ஊதிய திட்ட எண் பெற இயலவில்லை.
* கடன் பெறக்கூட பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஊதிய சான்று தர மறுப்பு.
* வரையறை விடுப்பு இல்லை.
* பதவி உயர்வுக்கு அனுமதி மறுப்பு
₹ மிகவும் கொடுமை இதில் யாதெனில் பணியில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை ஒரு சில ஆசிரியர்கள் ஊதியமே பெறாமல் இன்றும் பணியில் உள்ளனர்.
இவை எல்லாவற்றிலும் மேலாக தகுதியற்ற ஆசிரியர்கள் என ஒரு சில பள்ளிகளின் மூத்த ஆசிரியர்களால் எள்ளி நகையாடப்படும் சூழலும் உண்டு என்பதை மறுப்பதற்கு இல்லை.
தமிழக முதல்வர் இவர்களின் பிரட்சனைகளை உள்ளார்ந்து பார்க்கும் நிலையில் பணியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு  ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து முழு விலக்கு அளிப்பது மட்டுமே ஒரே தீர்வு என்பது உண்மை.
நம் ஒட்டுமொத்த ஒரே நம்பிக்கை தமிழக அரசின் கல்வி சார்ந்த கொள்கை முடிவில் மறு பரிசீலனை செய்து பணியில் உள்ள இந்த 3300 பட்டதாரி ஆசிரியர்களின் எதிர்காலத்தை கருணை உள்ளத்துடன் பார்த்து ஒரு அரசாணை பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசிடம் வேண்டுதல்களை முன் வைப்பது மட்டுமே.
இந்த 2016 ஆம் ஆண்டு நமக்கு ஆசிரியர்களுக்கு கருப்பு ஆண்டாக மாறாமல் வெளிச்ச ஆண்டாக மாற்றம் பெறுவது தமிழக முதல்வர் அவர்களின் கருணையில் தான் உள்ளது.
ஆகவே தமிழக அரசிடம் நம் நிலையை எடுத்துக் கூற வரும் சனிக்கிழமை ( 09/01/2016 ) காலை 10 மணிக்கு கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள பூங்காவில் கூட முடிவு செய்யப்பட்டுள்ளது...  இந்த சந்திப்புக்கு மிக குறைந்த நேரமே உள்ளதால்... தங்கள் வருகையை உறுதி செய்ய தயை கூர்ந்து கீழ் வரும் எண்களில் ஏதேனும் ஒன்றுக்கு தங்கள் பெயர், ஊர், பள்ளி, மாவட்டம், பணி நியமனம் பெற்ற நாள் மற்றும் தொடர்பு எண் முதலியவற்றை குறுஞ்செய்தி அல்லது வாடஸ் ஆப் செய்யுங்கள்.
9962228284
9655949077
7200775906
9894507798
9791540176
நன்றி.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive