புதுடில்லி,:கார், பைக் உள்ளிட்ட வாகனங்களின் இன்சூரன்ஸ் ஆவணங்கள்,
விரைவில் மின்னணு முறையில் மாற்றப்பட உள்ளதால், போக்குவரத்து போலீசாரின்
சோதனையின் போது அவற்றின் நகல் எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இருக்காது.
இன்சூரன்ஸ் கட்டுப்பாடு ஆணையம், 'இ - வாஹன் பீமா' என்ற புதிய திட்டத்தை
துவக்கி உள்ளது. இதன்படி, இன்சூரன்ஸ் ஆவணங்கள் அனைத்தும் மின்னணு முறையில்
மாற்றப்பட உள்ளன.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
* வாகன உரிமையாளருக்கு, இ - மெயில் அல்லது எஸ்.எம்.எஸ்., மூலம்இன்சூரன்ஸ் பாலிசி விவரங்கள் அனுப்பப்படும்
* அதில், 'பார் கோடு, கியு.ஆர்., கோடு' போன்ற ரகசிய பதிவு கள் இருக்கும்
* 'ஸ்கேனிங்' இயந்திரம் மூலம், 'கியு.ஆர்., கோடு' ஸ்கேன் செய்யப்படும் போது இன்சூரன்ஸ் தகவல் மையத்தின் தொகுப்பில் உள்ள தகவல் தெரியவரும்
* கியு.ஆர்., கோடு முறையால் மோசடிகள் தடுக்கப்படும்
* இதை, ஸ்மார்ட் போன்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் கையில் உள்ள மின்னணு கருவி மூலம் படிக்க முடியும்; இதனால், வாகன காப்பீட்டு ஆவணங்களை காகித நகலாக எடுத்துச் செல்ல வேண்டிய தேவையில்லை 'இன்சூரன்ஸ் ஆவணம் கிடைக்கவில்லை' என, வாகன உரிமையாளர் புகார் செய்யும் நிலையும் வராது
* இன்சூரன்ஸ் நிறுவனங்களின் செலவு கணிசமாக குறையும். இந்த திட்டம், முதல்வர்சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா மாநிலத்தில் ஏற்கனவே அமலில் உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...