தேவகோட்டை:"வாழ்க்கை முழுவதும் கல்வி தான் சிறந்த நண்பனாக இருக்கும்,' என ஜெர்மனி பெண் ஆராய்ச்சியாளர் சுபாஷினிட்ரெம்மல் பேசினார்.
ஜெர்மனில் அனைத்து பள்ளிகளும் அரசு பள்ளிகளே
தங்க நகையே அணியாத நாடு ஜெர்மன்
வாழ்க்கையில் கல்வி தான் நண்பன்
வாழ்க்கையில் கல்வி தான் நண்பன்
ஜெர்மன் பெண் ஆராய்ச்சியாளர் பேச்சு
தேவகோட்டை
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் வாழ் வியல் விழிப்புணர்வு
நிகழ்ச்சி சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சந்திரமோகன் தலைமையில்
நடந்தது. தலைமையாசிரியர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். ஆசிரியை
செல்வமீனாள் வரவேற்றார்.
விழாவில் ஜெர்மனி தமிழ் மரபு
அறக் கட்டளை செயலாளரும்,கல்வெட்டு ஆராய்ச்சியாளரு மான மலேசியாவை சார்ந்த
சுபாஷினி ட்ரெம்மல்
மாணவர்களிடையே பேசுகையில், ""தமிழகத்திற்கு ஒரு முறை வந்தபோது,
கல்வெட்டுகளில் கிறுக்கல்கள் இருந்தது.அதில் உள்ளதை படிக்க முயற்சித்தபோது
கல்வெட்டு ஆராய்ச்சியில் ஆர்வம் வந்தது.ஜெர்மனியில் இலத்தீன் மொழியில்
கல்வெட்டுகள் உள்ளன.அங்குள்ள பாடபுத்தகங்கள் பெரிய அளவிலும்,பெரிய
படங்களுடன் உள்ளன.ஜெர்மனியில் எல்லா பள்ளிகலும் அரசு பள்ளிகள்தான்.ஆங்கிலம்
வந்ததற்கு ஜெர்மன் மொழிதான் காரணம்.பள்ளிகளில் வகுப்புகள் 1ம் வகுப்பு,2ம்
வகுப்பு,3ம் வகுப்பு,4ம் வகுப்பு எனவும்,பிறகு விரும்பிய பாடங்களை
படிக்கும் வண்ணமும் வகுப்புகள் இருக்கும். 5 வகுப்புக்கு இரண்டாவது மொழியாக
இத்தாலி,இலத்தீன் எதையாவது தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என தெரிவித்தார். பிறகு ஜெர்மனியில்
கோடை காலம்,வசந்த காலம்,குளிர் காலம்,இலையுதிர் காலம் என நான்கு பருவ
காலங்கள் உள்ளன. ஜெர்மனியில் கோதுமை,கம்பு,சோளம் கடுகு அதிகமாக
பயிரிடப்படுகிறது.கடுகில் இருந்து எண்ணெய் ,எரிவாய்வு
தயாரிக்கபடுகிறது.அங்கு 800 ஆண்டுகளுக்கு முன்பு பழமையான கீல்ஸ்
பல்கலைகழகம் உள்ளது.இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த ட்ரையர் என்ற பழமையான
தேவாலயம் உள்ளது என்றார்.மாணவ ,மாணவிகளுக்கு ஜெர்மனிக்கு சென்று வந்த
உணர்வு ஏற்பட்டது. தமிழகத்திற்கு இது வரை 16 முறை வந்துள்ளதாக
தெரிவித்தார்.தமிழகத்தில் மிகவும் பிடித்த இடம் திருவண்ணாமலை அருகே சமண
கோவில் உள்ள திருமலை என்கிற இடம் தான் என்று கூறினார்.ஜெர்மனியில் பிடித்த
இடம் பெர்லின் கூறினார்.தாய் மொழியில் மட்டுமே அனைவரும் நல்ல நிலைமைக்கு
வர இயலும் என்று கூறினார்.
பட விளக்கம் :
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...