கட்டாய கல்வி உரிமை சட்டத்தின், 'ஆல் பாஸ்' திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்த அறிக்கையை, ஒரு மாதத்திற்குள் அனுப்பும்படி, மாநிலங்களுக்கு, மத்திய அரசு கெடு விதித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய கல்வி ஆலோசனை வாரியம் சார்பில், குழு நியமிக்கப்பட்டு ஆய்வு நடந்தது. இதில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாற்றம் கொண்டு வரவும், 'ஆல் பாஸ்' திட்டத்தில் நிபந்தனைகள் விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில், 'ஆல் பாஸ்' திட்டத்தை மாற்றி அமைப்பது குறித்து, மாநிலங்கள் தங்கள் தரப்பு கருத்தை தெரிவிக்க, 2015 ஆகஸ்டில், மத்திய அரசு கடிதம் அனுப்பியது. பெரும்பாலான மாநிங்கள் இன்னும் கருத்து தெரிவிக்காததால், ஒரு மாதத்திற்குள் அனுப்பும்படி, மத்திய அரசு கெடு விதித்துஉள்ளது.
நிபந்தனைகள் என்ன?
* ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை கண்டிப்பாக தேர்வு
நடத்தி, சி.சி.இ., என்ற தொடர் மதிப்பீட்டு முறையை பின்பற்ற வேண்டும்
* தேர்வில், மூன்று, ஐந்து மற்றும் எட்டு என, மூன்று தரவரிசை வழங்கப்படும். எட்டாம் தரம் பெறும் மாணவர்களை, அடுத்த வகுப்புக்கு, 'பாஸ்' செய்யக்கூடாது
* அனைத்து வகுப்பு மாணவர்களும், குறைந்தது, 80 சதவீதம் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்பது கட்டாயம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...