Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மீண்டும் உடைந்தது ஆசிரியர் கூட்டுக்குழு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை, அரசிடம் முன்னெடுத்து வைக்கவும், அவர்களை ஒருங்கிணைக்கவும், ஜாக்டோ, ஜாக்டா என்ற அமைப்புகள் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது, 'டேக்டோ' என்ற புதிய அமைப்பு உருவாகிஉள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைக்காக, ஆசிரியர் சங்க கூட்டுக் குழுவினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், 'ஜாக்டோ' என்ற சங்கம், பல ஆண்டுகளாக, அரசு ஊழியர் சங்கங்களின், 'ஜியோ' அமைப்புடன் கை கோர்த்து, பல போராட்டங்களை நடத்தி வருகிறது. இதில், 24 முக்கிய சங்கங்கள் இடம் பெற்றுள்ளன.

இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன், 18 ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, 'ஜாக்டா' என்ற கூட்டு நடவடிக்கைக் குழு துவங்கப்பட்டது. இந்த குழுவும், போராட்டம் மற்றும் கூட்டங்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில், தற்போது மூன்றாவதாக, அ.தி.மு.க., அரசுக்கு ஆதரவாக, புதிய கூட்டு நடவடிக்கைக் குழு துவங்கப்பட்டு உள்ளது.தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற சங்க பேரவை ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியதாஸ், 11 சங்கங்களை சேர்த்து, 'தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு - டேக்டோ' என, தனி அமைப்பை ஏற்படுத்தி உள்ளார்.
அதன் உயர்மட்டக் கூட்டம், 19ம் தேதி, சென்னையில் நடந்தது. இதில் பேசிய சிலர், முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, இரு அமைப்புகள் செயல்பட்டு வரும் நிலையில், மூன்றாவதாக, டேக்டோ உதயமாகியுள்ளது, புது குழப்பத்தை
ஏற்படுத்தியுள்ளது




7 Comments:

  1. vilangirum.naalaa irungappa.

    ReplyDelete
  2. ஆசிரியர் : மாணவர்களே ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
    மாணவன் : ???????????

    ReplyDelete
  3. Activities of Letter pad sangam.....don't publish your web site Please…….

    ReplyDelete
  4. Is consolidated period will get or not ? 2004--2006 ??????

    ReplyDelete
  5. Is consolidated period will get or not ? 2004--2006 ??????

    ReplyDelete
  6. ennappa ippadi pandringaleppa

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive