வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழக அரசால்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம்
வழங்கப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு
உள்ளிட்ட கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5
ஆண்டுகளுக்கும் மேல் வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற
சாந்தோம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை அணுக வேண்டும்.
10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் உதவித்தொகை விண்ணப்பத்தை, சென்னை
நந்தனம் தொழில் திறனற்றோருக்கான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு
கொள்ளலாம்.
மனுதாரர்கள் கடந்தாண்டு டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி, தொடர்ந்து 5
ஆண்டுகள் பதிவு செய்து புதுப்பித்து வருபவராகவும், 40
வயதுக்குட்பட்டவராகவும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் 45வயதுக்கு
மிகாதவராகவும், தனியார், சுய வேலைவாய்ப்பில் ஈடுபடாதவராகவும், ஆண்டு
வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு உயிர்
பதிவேட்டில் இருந்தால், கிண்டி மகளிர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில்
உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளில்,
விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்றவர்கள், சுய உறுதி மொழி
ஆவணத்தை வேலைவாய்ப்பு பதிவு எண், உதவித்தொகை எண் ஆகிய விவரங்களுடன் நேரில்
சமர்ப்பிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...