2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர்
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வழங்கக்கோரி சென்னை
ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து லஸ் கார்டன் வரை ஊர்வலமாக சென்றனர்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி
பெற்றிருந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தின் போது, தகுதித்தேர்வில் தேர்ச்சி
பெற்ற எங்களுக்கு வேலை கொடுங் கள், எதிர்கால பயம் எங்களை வாட்டி வதைக்கிறது
என்ற கோஷங்களை எழுப்பினர். மேலும், தகுதித்தேர்வில் ஒவ்வொருவரும் எடுத்த
மதிப்பெண்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலத்தில் பங்கு பெற்றனர்.
இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் மு.ஜெயகவிதா பாரதி நிருபர்களிடம்
கூறியதாவது:-
கடந்த 2013-ம் ஆண்டு தமிழகம் முழுவதும்
நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல்
தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை கிடைக்காமல் போய்விட்டது. கடந்த 2
வருடங்களாக தவித்து வரும் எங்களுக்கு வேலை வழங்க வேண்டும். முதல்-அமைச்சர்
ஜெயலலிதா நினைத்தால் இது கண்டிப்பாக நடக்கும். அவரை சந்திக்க எங்களுக்கு
ஒரு நிமிடம் வாய்ப்பு தர வேண்டும். எங்கள் பயம் கலந்த வாழ்வை மீட்டெடுக்க,
எங்களுக்கு நம்பிக்கையும், எங்கள் தலைமுறை சிறக்க நியாயமும் வழங்க
வேண்டும்.
Lot of people like office staff getting promotions as bt teachers without passing ret exam.there is any g.o for that?
ReplyDeleteஅமைச்சர்களே துதிபாடுவதில் (ஜால்ரா) போடுவதில் ஆசிரியர்கள் உங்களையும் மிஞ்சி விடப்போகிறார்கள் உஷார். - Dinamalar
ReplyDeletehttp://www.pallikodam.com/2016/01/blog-post_22.html?m=1
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற நண்பர்களுக்கு வணக்கம்..
ReplyDeleteநான் மற்றும் செல்லத்துரை, கபிலன் மற்றும் பலரை போராட்டத்திற்கு வந்தால் போலிஸ் கைது செய்யும் என்று திட்டமிட்டு எங்களை பிரித்து சூழ்ச்சி செய்தார்கள்....மேலும் உங்களையும் நம்ப வைத்தார்கள்....
சென்ற வருடம் எங்களின் போராட்டம் எவ்வளவு பிரபலமடைந்தது எத்தனை கட்சிகள் ஆதரவாக அறிக்கை விட்டது அனைத்து மீடியாவும் துணை நின்றது காரணம் நாங்கள் உறுதியாக போராடினோம்...
தினமலர் உள்ளிட்ட அனைத்து செய்திகளிலும் முதல்பக்க செய்தியாக வந்தது...
ஆனால் இன்று திருமதி ஜெயகவிதாபாரதி அவர்கள் அரசியல் சூழ்ச்சி செய்கிறார் அதற்காக பலர் அருப்புக்கோட்டை இராஜபாண்டி உட்பட துணை போகிறார்கள்.... மீடியாவுக்கு நன்கு தெரிந்துதான் இப்போது இவர்களுக்கு சப்போர்ட் பண்ணவில்லை....அரசியல் சூழ்ச்சியை விரைவில் மீடியாவுக்கு வெளிப்படுத்துவோம்....
ஆசிரியர்களே யார்க்கு வேண்டுமானாலும் சப்போர்ட் பன்னுங்கள் ஆனால் சிலரின் கட்சி சூழ்ச்சிக்கு துனைபோகாதீர்கள்...
தினத்தந்தி செய்தியை படித்து விட்டு இவர்களின் ஜால்ரவை கேவலமாக சித்தரித்ததை படித்து விட்டு யோசியுங்கள்...
இவர்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமில்லை....
இவர்களின் அரசியல் ஜால்ராவால் மற்ற கட்சிகளும் ஆசிரியர்களை தவறாக என்னக்கூடும்.... நாளை வேறு அரசு தலைமையேற்றால் எந்த முகத்தை வைத்து நமக்கு பணி கேட்பது....யோசியுங்கள் நண்பர்களேஎ.... உண்மையான போராளிகளை இவர்கள் ஒதுக்குவது சுயநலம் மட்டுமே...
நீங்களே மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் இவர்களின் பேரணி திட்டமிட்ட அரசியல் இல்லை என்று சொல்லமுடியுமா??
மீடியாக்களுக்கு புரிந்து விட்டது உங்களுக்கு புரியும் நாள் வெகுதூரம் இல்லை..
விரைவில் புரட்சிகரமான அனைத்து மீடியாக்களின் உதவியோடு நடைபெறும்...
போராளிகள் தோற்பதில்லை....
பி.இராஜலிங்கம் புளியங்குடி
Friends ithu poi report... unamaiyai dinamalar paper cutting parunga...
ReplyDeleteEllarum and padasalai admin..
Enter your comment...we will win soon.
ReplyDeleteSir please continue it
ReplyDelete