'பாடப் புத்தகங்களில், சுவாமி விவேகானந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் பற்றிய பாடங்களை குறைத்தது ஏன்' என, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான, என்.சி.இ.ஆர்.டி.,யிடம், மத்திய தகவல் கமிஷன் கேட்டுள்ளது.
ஆனால், தற்போது, சுதந்திர போராட்ட வீரர் சந்திர சேகர ஆசாத், புரட்சியாளர்கள் ராஜ்குரு, சுக்தேவ் உட்பட, 36 பேர் பற்றிய பாடங்கள், வரலாறு புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டன.ஆனால், கிரிக்கெட்டுக் கும், ஜவுளிகள் பற்றிய வரலாறுக்கும், 37 பக்கங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. நேதாஜி பற்றிய பாடம், 8ம் வகுப்பு புத்தகத்தில், 500 வார்த்தைகளும், பிளஸ் 2 வகுப்பு புத்தகத்தில், 1,250 வார்த்தைகளும் இடம் பெற்றிருந்தன.
இப்போது, பிளஸ்2 வகுப்பு புத்தகத்தில், 87 வார்த்தைகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. 8ம் வகுப்பு புத்தகத்தில், நேதாஜி பற்றிய பாடமே இல்லை. சுவாமி விவேகானந்தர் பற்றிய பாடங்களும் குறைக்கப்பட்டுவிட்டன. இதுகுறித்து, தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சிலிடம் விளக்கம் கேட்டும், போதிய பதில் கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் மனுவில் கூறி இருந்தார்.இந்த மனு மீதான விசாரணை, மத்திய தகவல் கமிஷனர், ஸ்ரீதர் ஆச்சார்யலு முன்னிலையில் நடந்தது.
என்.சி.இ.ஆர்.டி., சார்பில் ஆஜரான பேராசிரியர் நீரஜ் ராஷ்மி கூறுகையில், ''பாடப் புத்தகங்கள் தொடர்பான அனைத்து ஆலோசனைகளையும், பாடத்திட்ட ஆய்வு கமிட்டியிடம் தெரிவித்து விடுவோம். கமிட்டி தெரிவிக்கும் பரிந்துரைகளை அமல்படுத்துவோம். கமிட்டியின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிட மாட்டோம்,'' என்றார்.
மனுதாரருக்கு உரிமை:இதையடுத்து, தகவல் கமிஷனர் ஆச்சார்யலு பிறப்பித்த உத்தரவு: பாடங்கள் நீக்கப்பட்டது, குறைக்கப்பட்டதற்கான காரணங்களை அறிய மனுதாரருக்கு உரிமை உள்ளது. அதனால், விவேகானந்தர், நேதாஜி ஆகியோரின் பாடங்கள் குறைக்கப்பட்டதற்கான காரணத்தையும், தலைவர்கள் பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டதற்கான காரணத்தையும், என்.சி.இ.ஆர்.டி., தெரிவிக்க வேண்டும். தலைவர்களின் பாடங்களை மீண்டும் சேர்க்க, எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளையும், என்.சி.இ.ஆர்.டி., தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...