Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவர்கள் போராட்டத்தால் தலைமை ஆசிரியர் மாற்றம்

       சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டியில் பேரறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 1600 மாணவ – மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 36 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக மேட்டுரை சேர்ந்த வசந்த குமாரி என்பவர் பணியாற்றி வந்தார்.
 
         கடந்த நவம்பர் மாதம் 26–ந்தேதி அந்த பள்ளியில் படிக்கும் பிளஸ்–1, பிளஸ்–2 மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பள்ளி முன்பாக சாலை மறியல் போராட்டத்திலும், பள்ளி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் மீது சரமாரியாக குற்றம் சாட்டினர்.
மாணவிகள் பூ வைத்து, மருதாணி இட்டு, பவுடர் போட்டு வந்தால் தலைமை ஆசிரியர் அவதூறாக பேசுவதாக புகார் கூறினர். மாணவர்களை ஜாதி– மத அடிப்படையில் பேசுவதாகவும், பெற்றோர் – ஆசிரியர் கழக நிதியாக மாணவர்களிடம் ரூ.200 முதல் ரூ.500 வரை வசூலிப்பதாகவும் கூறினர். தேர்வு கட்டணம் என்று தலா ரூ.100–ம் பிளஸ்–1 பிளஸ்–2 மாணவர்களிடம் ரெக்கார்டு நோட்டிற்கு ரூ.300–ம் வசூல் செய்து உள்ளதாக மாணவர்கள் குற்றம் சட்டினர். மேலும், பள்ளியில் குடிநீர் வசதி இல்லை, கழிப்பிட வசதி இல்லை, சுற்றுசுவர் இல்லாததால் சமூக விரோதிகள் நள்ளிரவில் பள்ளியில் புகுந்து அசுத்தம் செய்வதாகவும் குறை கூறினர்.
மேலும், மாணவ–மாணவிகளை அவதூறாக பேசும் தலைமை ஆசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் பள்ளியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இதை அடுத்து தொளசம்பட்டி போலீசார் மாணவர்களை சமரசம் செய்து பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் அடையாததால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி இது குறித்து நேரில் விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் பிரச்சனைக்கு காரணமான தலைமை ஆசிரியர் அதிரடியாக மாற்றப்பட்டார். தொளசம்பட்டி பள்ளிக்கு மனோகரன் என்பவரை தற்போது தலைமை ஆசிரியராக நியமித்து உள்ளனர். பிரச்சனைக்கு காரணமான தலைமை ஆசிரியர் வசந்தகுமாரியை ஓமலூரை அடுத்த முத்து நாயக்கன்பட்டி பள்ளிக்கு மாற்றி உள்ளனர். 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive