சேலம்: தமிழகத்தில், அரசு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ள, தேர்வுகால விதிமுறை மற்றும் வழிமுறைகளை, பள்ளிக்கல்வி மற்றும் மாற்றுத்திறனாளி நலத்துறை தெளிவுப்படுத்த வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில செயலர் நம்புராஜன்,அரசுக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:
நடப்பு கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதும், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு, அரசு வகுத்துள்ள விதிமுறைகளை தெளிவுப்படுத்த வேண்டும். குறிப்பாக, அவர்களது, பெற்றோரை அலைக்கழிப்பு செய்யக்கூடாது. பார்வை இழப்பு, நரம்பியல் பாதிப்பு, கை செயல்பாடின்மை, மூளை முடக்குவாதம் மற்றும் மிதமான மனவளர்ச்சி பாதிப்புள்ள மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் தேர்வு எழுத,எழுத்தர்களை அமர்த்திகொள்ளவும், தேர்வு எழுத, கூடுதலாக ஒரு மணி நேரம், எடுத்து கொள்ளவும் அரசு உத்தரவு உள்ளது. மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர், அவர்களாகவே, கல்வித்துறை அலுவலகத்துக்கு சென்று, இத்தகைய விதிமுறைகளை தெரிந்து, பின்பற்ற, வலியுறுத்த வேண்டி உள்ளது.
இந்த குறைபாடுகளை களைய, பள்ளிக்கல்வி மற்றும் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில்,பொதுத்தேர்வுக்கு முன்பாக, மாணவ, மாணவியருக்கு
தேர்வுக்காக வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளை தெளிவு
படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...