மாநில அளவிலான கல்லூரி ஆசிரியர் தகுதி (செட்) தேர்வுக்கான கட்டணம், அகில இந்திய அளவில் நடத்தப்படும் "நெட்' தேர்வைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக உள்ளது விண்ணப்பதாரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு தேசிய அளவிலும், மாநில அளவிலும் தகுதித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
அவ்வாறு 2016-ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான (செட்) தகுதித் தேர்வு, கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படுகிறது. பிப்ரவரி 21-ஆம் தேதி நடத்தப்பட உள்ள இந்தத் தேர்வுக்கு பிப்ரவரி 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுக் கட்டணம் ரூ. 1,500 என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ. 1,250-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ. 500-ம் என்ற அளவில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண நிர்ணயம் விண்ணப்பதாரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனியார் கல்லூரி பேராசிரியர் முருகானந்தம் கூறியதாவது:நியாயமில்லை:
"நெட்', "செட்' இரண்டு தேர்வுகளையும் நடத்துவதற்கான அனுமதியை யுஜிசி-தான் வழங்குகிறது.
இந்த நிலையில்"நெட்' தேர்வுக்கு கட்டணமாக ரூ. 600 வசூலிக்கப்படும் நிலையில், "செட்' தேர்வு கட்டணம் ரூ. 1,500-ஆக நிர்ணயிக்கப்பட்டிருப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை என்றார். தமிழகத்தில் கடைசியாக கடந்த 2012-இல் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் "செட்' தேர்வு நடத்தப்பட்டபோது தேர்வுக் கட்டணமாக ரூ. 1,000 வசூலிக்கப்பட்டது. இப்போது மேலும் ரூ.500 உயர்த்தப்பட்டிருப்பது ஏழை மாணவர்களை கடுமையாகபாதிக்கும். எனவே, கட்டணத்தைக் குறைக்க பல்கலைக்கழகம் முன்வர வேண்டும் என்றார்.இதுகுறித்து தேர்வை நடத்தும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பதிவாளர் என். கலா கூறியது:விசாரிக்கப்படும்..: "செட்' தேர்வுக்கு முந்தைய ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட கட்டணங்களின் அடிப்படையிலேயே, இப்போதையக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இதைக் குறைப்பதற்கு வாய்ப்பில்லை என்றார்.
இதுகுறித்து யுஜிசி துணைத் தலைவர் ஹெச். தேவராஜ் கூறியது:"செட்' தேர்வை நடத்த இந்த ஆண்டு அனுமதித்துள்ளோம். இந்தத் தேர்வை நடத்த அன்னைத் தெரசா மகளிர் பல்கலைக்கழகம் எடுத்துள்ள முடிவு இன்னும் யுஜிசி-க்கு வந்து சேரவில்லை. இதனால் தேர்வுக் கட்டணம் குறித்த தகவல் தெரியவில்லை. எனவே, விவரங்கள் யுஜிசி-க்கு கிடைத்ததும் கட்டணம் குறித்து விசாரிக்கப்படும் என்றார்.
How to get dept permission to set exam.... who will give..... i am govt pg teacher.... anybody knows answer me sir....
ReplyDeleteCEO will give the permission to write ..approach ceo office...with HM forward letter
DeleteCEO will give the permission to write ..approach ceo office...with HM forward letter
DeleteThank you sir
ReplyDelete