Home »
» புதிய கல்விக் கொள்கை - 'பள்ளிகள் ஹோம் ஒர்க் கோ - எஜுகேஷன் கூடாது'
புதிய
கல்விக் கொள்கையை உருவாக்க, தேவையான ஆலோசனைகளை அளிக்கும்படி, பிரதமர்
நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, பல்வேறு தரப்பினருக்கும்
அழைப்பு விடுத்தது.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கல்விப் பிரிவான வித்யா பாரதி, பல்வேறு ஆலோசனைகள் அளித்துள்ளது; அதன் முக்கிய அம்சங்கள்:
*
காலை, 7:30 மணி முதல், மாலை, 7:30 மணி வரை, 12 மணி நேரம் வகுப்புகள்
நடத்தப்பட வேண்டும்* வெளிநாட்டு மொழிகளுக்குபதிலாக, சமஸ்கிருதம் கற்றுத் தர
வேண்டும்
*
சிறிய வயதில், மாணவர்கள், மிகவும் எளிதாக மொழிகளை கற்றுக் கொள்ள முடியும்.
அதன்படி, தாய்மொழி, சமஸ்கிருதம், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய
மொழிகள் கற்றுத் தரப்பட வேண்டும்
* தற்போதைய, 6 மணி நேர பள்ளிநேரத்தில், இவற்றை கற்றுத் தர முடியாது.
* வழக்கமான பாடத்துடன், மொழி, இசை, விளையாட்டு ஆகியவற்றையும் கற்றுத் தர வேண்டும்
* இந்த புதிய பாடத் திட்டத்தின்படி, 'ஹோம் ஒர்க்' இருக்காது. இது, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் வசதியாக இருக்கும்
* இருபாலரும் ஒரே வகுப்பில் பயிலும், 'கோ - எஜுகேஷன்' முறை இருக்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அப்படியே குலக்கல்வி ,4 வருனத்தாருக்கான கல்வி என்று பட்டியலிடுங்களேன். நாடு விளங்கிடும்..!
ReplyDeletepls dont publish biased news sir
ReplyDeletepls dont publish biased news sir
ReplyDelete