தமிழகத்தில்,
10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு
விட்டன. தள்ளிவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வும், 11ம் தேதி துவங்குகிறது.
இதனால்,
மழை மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையால், கிடப்புக்குப் போன பாடங்களை
விரைந்து முடிக்க, ஆசிரியர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
அதற்கு
முட்டுக்கட்டை போடும் விதமாக, ஆசிரியர்களுக்கான பாடம் எடுக்கும்
பயிற்சியை, ஆர்.எம்.எஸ்.ஏ., என்ற, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கக
அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதாவது, 10ம் வகுப்பு பாடம் எடுக்கும் தமிழ்
ஆசிரியர்களுக்கு, நேற்று முதல், 9ம் தேதி வரை, மூன்று நாட்கள், மாவட்ட
ரீதியாக சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த மூன்று நாட்களும், பள்ளி
வேலை நாட்கள் என்பதால், ஆசிரியர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்
arasu uthavi perum palli asiriyarkalukku intha pairche ellayam..anal resultukku mattum avarkal enna kodumai samy...
ReplyDelete