Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்தல் முறைகேட்டை அனுப்ப 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' வசதி


        சென்னை: ''சட்டசபை தேர்தல் முறைகேடு புகார்களை, படங்களுடன் அனுப்ப, 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' வசதி செய்யப்பட்டுஉள்ளது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

           கண்ணியமான தேர்தலுக்கான அமைப்பின் சார்பில், 'கண்ணியமான தேர்தல்' என்ற தலைப்பில், வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம், துவங்கியது. சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லுாரியின், மனித உரிமைகள் துறையுடன் இணைந்து, இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தேவசகாயம் உள்ளிட்டோர் முக்கிய விருந்தினராக பங்கேற்றனர்.


நிகழ்ச்சியில் ராஜேஷ் லக்கானி பேசியதாவது: நேர்மையான தேர்தல் நடத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. முறைகேடு புகார்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து புகார் அளிக்கவும், படங்கள் எடுத்து அனுப்பவும், 'பேஸ் புக், வாட்ஸ் ஆப்' வசதி அறிமுகம் செய்யப்படும். மாணவர்கள், என் அலைபேசி எண்ணுக்கே, 'வாட்ஸ் ஆப்'பில் புகார்அனுப்பலாம். ஆனால், தவறான தகவல் தர வேண்டாம்.

தேர்தல் நாளில் வீட்டிலிருந்து, 'டிவி' பார்த்து கொண்டிருக்காமல், முதலில் ஓட்டை பதிவு செய்யுங்கள். மாணவியர், இளைஞர்கள் அனைவரும், தேர்தல் துறையின் துாதராக, தலைமை தேர்தல் அதிகாரியாக நினைத்து, நேர்மையான தேர்தல், ஓட்டு போடுவதன் அவசியத்தை, குடும்பத்தில், அக்கம் பக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

'ஊழல் கரங்களுக்கு ஓட்டு வேண்டாம்':

நிகழ்ச்சியில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் பேசியதாவது:நான், 2011 தேர்தலில் மதுரை கலெக்டராக இருந்த போது, 'பணநாயகம்வீழ்த்தப்பட வேண்டும்' என, தேர்தல் அதிகாரிகள் கூறினர். அதை மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு செய்து, பகலில் வாக்காளர்களுக்கு போதனையும், இரவில் வாகன சோதனையும் மேற்கொண்டோம். நேர்மையான தேர்தலை நடத்தினோம்.அதேபோல், இந்த தேர்தலும் கண்ணியமாக நடக்கும் என நம்புகிறேன். ஊழல் கரங்களுக்கு ஓட்டு போட வேண்டாம்.நீங்கள் பொறுப்பாக ஓட்டு போட்டால் நாட்டில் புரட்சி நடக்கும். பணத்தை வாங்கி ஓட்டு போடாதீர்கள்.மாணவர்கள் மூலம், பொறுப்புள்ள சமூகத்தை உருவாக்கலாம். நீங்கள் நேர்மையாக இருக்க, உங்கள் குடும்பம் நேர்மையாக இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். உங்கள் கண்ணியமான ஓட்டின் மூலம், வேலையில்லா திண்டாட்டம் ஒழியும்; 

விவசாயி தற்கொலை செய்ய மாட்டார்கள்; மன்னர்களை மண்டியிட வைக்கும் ஜனநாயக கடமை உங்களிடம் உள்ளது. நீங்கள் இந்த தேசத்தை நேசிப்பதை உறுதிப்படுத்த, ஊழலற்றவர்களுக்கு ஓட்டு போடுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive