Home »
» உலகம் முழுவதும் இனி 'வாட்ஸ் ஆப்' இலவசமாகிறது; வருடாந்திர சந்தா கட்டணம் ரத்து
பிரபல சமூக
வலைத்தளமான 'வாட்ஸ் ஆப்'-ஐ உலகம் முழுவதும் 100 கோடி பேர் பயன்படுத்தி
வருகின்றனர். தனது நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதற்கு பெரும்பாலும் இதை
சார்ந்தே பலரும் இருக்கிறார்கள்.
தற்போது
வரை வாட்ஸ் ஆப்-க்கு ஓராண்டுக்கு பிறகு பயன்படுத்த ஆண்டு ஒன்றுக்கு 1
டாலர் சந்தா கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இனி இந்த
கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது. இன்னும் சில
வாரங்களில் வாட்ஸ் ஆப்பின் அனைத்து பதிப்புகளுக்கு கட்டணம் முற்றிலுமாக
ரத்து செய்யப்படுகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு 19 பில்லியன் டாலருக்கு வாட்ஸ் ஆப்-ஐ பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...