Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சினிமா சூட்டிங்கிற்காக சிறையான அரசு பள்ளி

       பெரியகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறைபோல 'ஷெட்' அமைத்து திரைப்பட சூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது. இது ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படு்த்தியுள்ளது.
 
        தேனிமாவட்டம் பெரியகுளம் விக்டோரியா நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 105 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. அரையாண்டுத்தேர்வு ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டதால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு இங்கு சிறப்பு வகுப்புகள் நடக்கின்றன. 500 பேர் படித்து வருகின்றனர்.திரைப்பட சூட்டிங்இந்நிலையில் திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் நடிக்க, புதுமுக இயக்குனர் சந்திரா இயக்கி வரும் 'கள்ளன்' திரைப்பட சூட்டிங் இப்பள்ளியில் நேற்று துவங்கியது.
 
             பள்ளியின் கீழ்தளத்தில் ஐந்து வகுப்பறைகளை பெரியசிறை போல் 'ஷெட்' அமைத்து மாற்றியுள்ளனர். இங்கு கைதிகளாகவும், போலீசாகவும் துணை நடிகர்கள் ஏராளமானோர் நடித்து வருகின்றனர். சிறப்பு வகுப்பிற்கு வந்த மாணவர்கள் பலர் படிப்பை தவிர்த்து சூட்டிங்கை வேடிக்கை பார்க்கின்றனர்.சமூக ஆர்வலர்கள் வருத்தம்அரசின் பல்வேறு உயர்பணிகளில் பணிபுரிவோர், வர்த்தகர்களை உருவாக்கிய கோயிலுக்கு சமமான இப்பள்ளியில், சிறை போன்ற 'ஷெட்' அமைத்து திரைப்பட சூட்டிங் நடத்துவது, மாணவர்கள் மனதில் தவறான எண்ணங்களை விதைத்துவிடும் என பள்ளி ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

தலைமையாசிரியர் அப்துல்ஜப்பாரிடம் கேட்டதற்கு, 'சூட்டிங் எடுக்க யாரும் அனுமதி கொடுக்கவில்லை' என்றவர், சிறிது நேரத்தில் 'பள்ளி விடுமுறையில் அனுமதி பெற்று சூட்டிங் எடுக்கின்றனர்,' என்றார்.


பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) வனஜா கிரனப் செல்வக்குமாரி கூறுகையில், “மாணவர்களுக்கு புத்தகம், நோட்டு வழங்கும் பணிக்காகவும், சிறப்பு வகுப்பு நடப்பதை பார்வையிடவும் அப்பள்ளிக்குச் சென்றேன். ஆனால் வகுப்பறையில் சிறை போல 'ஷெட்' அமைத்து சூட்டிங் நடத்துவதை பார்த்து எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. தலைமையாசிரியர் அனுமதி கொடுத்து உள்ளார் எனத்தெரியவருகிறது. உயர்அதிகாரிகளிடம் இதுபற்றி தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்,”என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive