Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரையாண்டு தேர்வில் புதிய வினாத்தாள் அறிமுகம்

         பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு, நேற்று துவங்கியது. பொதுத் தேர்வுக்கு முன்னோட்டமாக, தேர்வு துறையின் புதிய வினாத்தாள் அறிமுகமாகி உள்ளது.'கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில், நடப்பாண்டு பொதுத் தேர்வு வினாத்தாளில் மாற்றம் கொண்டு வரப்படும்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது. அதனால், அனைத்து மாணவர்களும் புத்தகம் முழுவதையும் படித்தால் மட்டுமே, 'சென்டம்' பெறலாம் என்ற நிலை உள்ளது.
 
         அதற்கு முன்னோட்டமாக, அரையாண்டு தேர்விற்கு தேர்வுத்துறை உருவாக்கியுள்ள வினாத்தாளை பார்த்துக் கொள்ளலாம் என, தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
       இந்நிலையில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று துவங்கிய அரையாண்டு தேர்வில், புதிய முறை வினாத்தாள் அறிமுகமானது. பாடங்களின் பின்பக்க கேள்விகள், முந்தைய ஆண்டு பொதுத்தேர்வு கேள்விகள் தவிர, பாட அம்சங்களில் இருந்தும் புதிய கேள்விகள் இடம்பெற்றிருந்தன.
 
         இந்த கேள்விகளுக்கு, வகுப்பில் முதல் தர மாணவர்கள் மட்டுமே பதில் எழுத முடிந்தது; பிற மாணவர்கள் திணறினர். இனி வரும் பொதுத்தேர்வில், இதுபோன்ற வினாத்தாள் முறையே அறிமுகமாக உள்ளது.
        எத்தனை கேள்விகள்பிளஸ் 2 தமிழ் முதல் தாள் வினாத்தாளில், நான்கு மதிப்பெண்ணில், ஒரு கேள்வி; ஒரு மதிப்பெண்ணில், ஒன்பது கேள்விகள் என, 13 மதிப்பெண்களுக்கு, மொத்தம், 10 கேள்விகள், புத்தகத்தின் உட்பகுதியிலிருந்து கேட்கப்பட்டிருந்தன.

          இதேபோல், 10ம் வகுப்பு தமிழ் முதல் தாளில், நான்கு மதிப்பெண்ணில், இரண்டு கேள்விகள்; இரண்டு மதிப்பெண்ணில் ஆறு; ஒரு மதிப்பெண்ணில் நான்கு; எட்டு மதிப்பெண்ணில் ஒன்று என, மொத்தம், 32 மதிப்பெண்களுக்கு, 13 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.




1 Comments:

  1. 10th marks became less value due to more no of state first marks..
    http://www.kinindia.net

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive