தைப்பூச
விழாவை முன்னிட்டு பழநி -- காரைக்குடி வரை ஜன.,23, 24 நாட்களில் சிறப்பு
ரயில்களை இயக்க தென்னக ரயில்வே முடிவுசெய்துள்ளது.பழநி தைப்பூச விழா இன்று
கொடியேற்றத்துடன் துவங்கி ஜன.,27 வரை நடக்கிறது.
முக்கிய நிகழ்ச்சியான
தைப்பூசம் ஜன.,24ல் தேரோட்டம் நடைபெற உள்ளது. பாதயாத்திரை பக்தர்களால்
மதுரை, திருச்செந்துார், சென்னையில் இருந்து பொள்ளாச்சி வரை செல்லும்
ரயில்களில் இடம் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். தைப்பூசத்திற்கு கூடுதல்
ரயில்கள் இயக்க கோரிக்கை எழுந்தது.
ஜன.,23, 24, ஆகிய இரண்டு நாட்கள் பழநி-- காரைக்குடி இடையே சிறப்பு பயணிகள் ரயில்களை இயக்க தென்னக ரயில்வே முடிவுசெய்துள்ளது. இதற்கு கட்டணமாக பழநி--காரைக்குடிக்கு ரூ.85 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்களில் 10 முதல் 12 பெட்டிகளும், அத்துடன் வழக்கமாக பழநி வரை வரும் ரயில்களில் ஒன்று முதல் இரண்டு கூடுதல் பெட்டிகள் இணைக்க முடிவு செய்துள்ளனர்.* ஜன.,23, 24 ஆகிய நாட்களில் சிறப்பு பயணிகள் ரயில் பழநியிலிருந்து மாலை 3.30க்கு புறப்பட்டு திண்டுக்கல், கொடைரோடு, மதுரைக்கு 6.15க்கு சென்று அங்கிருந்து மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை ரஸ்தா வழியாக இரவு 9.30க்கு காரைக்குடி செல்கிறது.
* தைப்பூசத்தன்று (ஜன.,24ல்) காரைக்குடியில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு காலை 8க்கும், திண்டுக்கல்லில் காலை 9.10க்கு புறப்பட்டு காலை 10.30க்கு பழநி வந்துசேரும்.* மதுரையிலிருந்து சிறப்பு ரயில் ஜன.,23 காலை 10.30க்கு புறப்பட்டு கொடைரோடு, திண்டுக்கல்லில் காலை 11.35க்கு புறப்பட்டு பகல் 1க்கு பழநி வந்துசேரும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...