அரையாண்டு தேர்வு நடக்கும் போது மக்கள்தொகை கணக்கெடுப்பு பெயரில் ஆதார்
அட்டையுடன், வாக்காளர் அட்டை இணைக்கும் பணிக்கு ஆசிரியர்கள் செல்வதால்,
மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது.
தமிழ்நாடு உயர்நிலை,
மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கழக மாவட்ட தலைவர் முருகேசன்,செயலாளர் ஜெகதீஷ்குமார், பொருளாளர் பிரான்சிஸ் பிரிட்டோ ஆகியோர்
கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில்
பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஏற்பட்ட
பிழைகளை திருத்தம் செய்தல், மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஆதார் எண்ணை
இணைத்தல் போன்ற பணிகளுக்காக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பத்தாம்
வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கி வரும் நிலையில் மாணவர்களை முழுத்தேர்ச்சி
அடைய வைப்பதற்கு பல்வேறு பயிற்சி அளிப்பதிலும், சிறப்பு வகுப்பு
எடுப்பதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். பொதுத்தேர்வு செய்முறை
தேர்வுக்காக மாணவர்களை தயார் செய்வதாலும், ஆசிரியர்கள் மும்முரமாக
செயல்பட்டு வருகின்றனர்.
கிராமப்புற மாணவர்களின் தேர்ச்சிக்காக, அர்ப்பணிப்போடு அரசு பள்ளி
ஆசிரியர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பட்டதாரி ஆசிரியர்களை
ஈடுபடுத்துவதால் பொதுத்தேர்வு மற்றும் செய்முறைத்தேர்வுக்கு தயராகும்
மாணவர்களின் நலனில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது. கலெக்டர் ஹரிஹரன்
மாணவர்களின் நலன் கருதி, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியிலிருந்து பட்டதாரி
ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும், என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...