திண்டுக்கல்:உலக வேட்டி தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, திண்டுக்கல்
தொடக்கக் கல்வித்துறை அலுவலக ஆண் ஊழியர்கள் வேட்டி அணிந்து அசத்தினர்.
வேட்டி தமிழகத்தின் அடையாளம். தமிழர்களின் உடை கலாசாரத்தை உலக அரங்கிற்கு
கொண்டு செல்ல வேண்டும் என, ஆண்டுதோறும் ஜன. 6ல் 'உலக வேட்டி தின விழா'வாக
கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழகத்தில் அலுவலகங்கள்,
கல்விநிறுவனம், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஆண்
ஊழியர்கள்20க்கும் மேற்பட்டோர்வேட்டி கட்டி அலுவலகம்
வந்தனர்.திண்டுக்கல் தொடக்கக்கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் ஆண் ஊழியர்கள்
வேட்டி அணிந்து அலுவலகம் வந்தனர். அவர்களுக்கு பெண் ஊழியர்கள் வேட்டிதின
வாழ்த்து கூறினர்.
தொடக்கக்கல்வி அலுவலர் பாண்டியராஜன் கூறியதாவது: வேட்டி, தமிழர் கலாசாரத்தை
உலக அரங்கில் பிரதிபலிக்கும் உன்னத உடை. அதை அடிக்கடி ஆண்கள் அணிய
வேண்டும். கல்வித்துறை அனைத்துக்கும் முன்னோடியாக திகழ வேண்டியதுறை
என்பதால், வேட்டி அணிந்து வர வலியுறுத்தினோம், என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...