பணிவரன் முறை, அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் உட்பட பத்து அம்ச கோரிக்கைகளை
வலியுறுத்தி, சென்னையில் வரும் பிப்., 8ம் தேதி முதல் காலவரையற்ற
உண்ணாவிரதத்தில் ஈடுபட தமிழ்நாடு சத்துணவு பணியாளர் சங்கத்தினர் முடிவு
செய்துள்ளனர்.மதுரையில் சங்க மாநில பொது செயலாளர் அயோத்தி கூறியதாவது:
சத்துணவு பணியாளர்களுக்காக தனித்துறையை அரசு ஏற்படுத்த வேண்டும்.சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு பணி விதிகளை ஏற்படுத்தி, பணி வரன்முறை செய்ய வேண்டும். ஓய்வுபெற்றவர்களுக்கு பணி நிலைக்குஏற்ப, அரசு ஓய்வூதியவிதிப்படி அகவிலைப்படியுடன் மாத ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், பொங்கல் கருணைத்தொகை, மருத்துவ காப்பீடு, பணிக்கொடை போன்ற சலுகைகளை வழங்க வேண்டும்.பள்ளிகளில் காலி சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களில் பெண்களை மட்டுமே நியமிக்கும் அரசு உத்தரவை மாற்றி, கிராம இளைஞர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். பத்தாண்டுகளுக்கு ஒரு முறை பணி நிலை உயர்வு வழங்க வேண்டும்.இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க மாநில செயற்குழு முடிவின்படி காலவரையற்ற உண்ணாவிரதம் 2016 பிப்., 8 ல் சென்னை எம்.ஜி.ஆர்., நினைவிடம் அருகில் துவங்கவுள்ளது, என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...