எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி உதவித் தொகைக்கான தேர்வு பிப்ரவரி 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக
அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்தி: தேசிய வருவாய் வழி,
திறன் படிப்பு உதவி திட்டத்தின் கீழ் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்
தொகை வழங்கப்பட உள்ளது.
இதற்கு
மாணவர்களைத் தேர்வு செய்வதற்காக வட்டார அளவில் வருகிற 23-ஆம் தேதி தேர்வு
நடத்தப்பட இருந்தது. இந்த நிலையில் அண்மையில் பெய்த மழை பாதிப்பால் சில
மாவட்டங்களில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதாலும், பருவத்
தேர்வுகள் ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ளதாலும் தேசிய வருவாய் வழி உதவித்
தொகைத் தேர்வு பிப்ரவரி 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்டுவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...