அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 710 ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர்- தரம் 3 (லேப் டெக்னீசியன் கிரேட்- 3)
பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் இந்தப் பணியிடத்துக்கு
தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
பிளஸ்-2 தேர்ச்சி பெற்று, மருத்துவக் கல்வி இயக்ககத்தால்
அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு நிறுவனத்தில் ஓராண்டு மருத்துவ ஆய்வகத்
தொழில்நுட்பம் பயின்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். நேரடி விண்ணப்ப
விநியோகம் கிடையாது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பிப்ரவரி 1-க்குள்
சமர்ப்பிக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு, பிளஸ்-2, ஆய்வகத் தொழில்நுட்பப் படிப்பு ஆகியவற்றின்
மதிப்பெண்களின்படி தகுதிகாண் மதிப்பெண் கணக்கிடப்பட்டு, தேர்வு
செய்யப்படுவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...