நிகழாண்டில் 33 பதவிகளில் காலியாகவுள்ள 5,513 காலிப் பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்கான திட்ட அறிக்கையை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் கே.அருள்மொழி கூறினார்.
குரூப் 1 பிரிவில் 29 துணை ஆட்சியர்கள், 8 வணிக வரித்துறை உதவி ஆணையர்கள், 5 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள், 1 மாவட்டப் பதிவாளர் உள்பட 45 பணியிடங்களும், 65 உதவி சிறை அலுவலர் பணியிடமும், வட்டார சுகாதாரப் புள்ளியியலாளர் பணியில் 172 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
கிராம நிர்வாக அலுவலர், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் அடங்கிய குருப் 2 தேர்வில் நேர்காணல், நேர்காணல் அல்லாத பணிகள் உள்ளிட்ட பல்வேறு காலியிடங்களின் விவரங்கள் வர வேண்டியுள்ளது. இதுவும் வரப்பெற்றால் இந்த ஆண்டில் 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப தேர்வுகள் நடத்தப்படும்.
புதிய பணியிடங்கள்: இந்த ஆண்டு முதல்முறையாக சுற்றுலா வளர்ச்சித் துறையில் 5 அதிகாரிகளையும், எல்காட் நிறுவனத்தில் துணை மேலாளர்களாக 12 பேரையும் பணியில் அமர்த்த தேர்வுகள் நடத்தப்படும். குருப் 3 பிரிவில் நேர்காணல் இல்லாத பணியில் 36 இடமும், குருப் 4 பணியிடத்தில் 4,931 காலியிடங்கள் என 5,513 பணியிடங்கள் நிரப்புவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
2015-ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய 9 தேர்வுகள் மழையின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டன. அவற்றுக்கான தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி பொறுப்பேற்றது முதல் 3 மாதங்களில் 12 தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு, 6 ஆயிரத்து 54 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்றார்.
பேட்டியின்போது தேர்வாணையச் செயலாளர் விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சோபனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...