சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்கு புதிதாக 4 வகை இன்சுலின் மருந்துகள் பயன்படுத்தப்பட உள்ளதாக கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
சர்க்கரை
நோய், அதற்கான நவீன கிசிச்சைக்கள் குறித்து ஆய்வு செய்வதற்கான
கருத்தரங்கம் திண்டுக்கல்லில் சனிக்கிழமை தொடங்கியது. மதுரை அரசு
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் எம்.வைரமுத்துராஜன் கருத்தரங்கைத்
தொடக்கிவைத்து பேசியதாவது:
இந்தியாவில் சுமார் 15 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருந்து மாத்திரைகள் மூலம் 30 சதவீதம் மட்டுமே சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். உணவு, உடல்பயிற்சி, மன அமைதி ஆகியவற்றினால் 70 சதவீத நோயைக் குணப்படுத்த முடியும் என்றார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில், கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி டீன் வடிவேல் முருகன், கரூர் டீன் ரேவதி கயிலைநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். அப்போது, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு இன்சுலின் ஊசிக்கு பதிலாக மாத்திரைகளை பரிந்துரை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. நாள்தோறும் இன்சுலின் ஊசி போடுவதற்கு பதிலாக, வாரத்துக்கு ஒரு முறை டெக்லியூடெக் என்ற மருந்து பயன்படுத்துவது குறித்து நடைபெற்று வரும் ஆய்வுகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
புதிதாக கண்டறியப்பட்டுள்ள 4 வகை இன்சுலின் மருந்து குறித்தும், அதைப் பயன்படுத்துவதன் மூலம் நோயாளிகளுக்கான பாதுகாப்பு குறித்தும் மதுரை சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர் வி.குமரவேல் விளக்கம் அளித்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 320 மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...