தேர்வு எழுதும்போது செய்யகூடாதவை ::
1. அவசரபட்டு தெரிந்த வினாவிற்கு தவறான விடையளிக்க வேண்டாம். கேள்வியை ஒருமுறைக்கு இருமுறை தெளிவாக படித்துவிட்டு விடையளிக்கவும். இதுதான் அனைவரும் செய்யும் பொதுவான பெரிய தவறு.
பிறகு வருத்தபட்டு பயனில்லை. அந்த ஒரு மதிப்பெண் கூட உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கலாம்.
2. தெரியாத வினாவிற்காக யோசித்துக்கொண்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம். பிறகு தெரிந்த வினாவிற்கு விடையளிக்க நேரம் இருக்காது.
3. எடுத்தவுடன் பொது அறிவு பகுதிக்கு செல்லகூடாது.
4. விடை தெரியாத வினாவாக இருந்தால் வருந்தாமல் இவ்வளவு படித்த நமக்கே கடினம் என்றால் அனைவருக்கும் கடினம் தான் என்று நினைத்து அடுத்த வினாவிற்கு செல்லவும்.
செய்யவேண்டியவை::
1. விடைத்தாளினை பூர்த்தி செய்யும் போது (பெயர் , பதிவு எண், வினாத்தாள் எண்) மிகுந்த கவனத்துடன் பூர்த்தி செய்ய வேண்டும்.
2. பொதுத்தமிழ் வினாக்களுக்கு முதலில் விடையளிக்கவும்.
3. குறிப்பாக ஒரு பத்து வினாக்களுக்கு விடை தெரியவில்லையெனில் அந்த வினாக்கள் அனைத்திற்கும் ஏதேனும் ஒரு விடையை மட்டும் குறிக்கவும்.
4. தமிழ் பகுதிக்கு விடையளிக்க 1 - 1.5 மணிநேரம் மட்டும் எடுத்து கொள்ளவும்.
5. கணிதத்தில் விடை தெரியாத வினாக்களுக்கு ஆப்சனில் இருந்து விடையை கொண்டுவர முயற்சி செய்யவும்.
அனைத்து தேர்வர்களுக்கும் நாளைய தேர்வு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் .... வெற்றி நமதே...!!!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...