தமிழகத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்விக் கட்டணத்தை திரும்ப வழங்கும் திட்டத்தின் கீழ் 2.84 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளதாக ஆளுநர் ரோசய்யா தெரிவித்தார். இது தொடர்பாக ஆளுநர் உரையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்டக் கல்லூரியும், பெருங்குடியில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகமும் அமைக்கப்பட்டு, சட்டக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்விக் கட்டணம் திரும்ப வழங்கும் திட்டத்தின் கீழ் கல்வியில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 84,609 மாணவர்கள் தடையின்றி உயர் கல்வி கற்க வாய்ப்புப் பெற்று பயனடைந்துள்ளனர்.
இத்தகைய முயற்சிகளின் காரணமாக தேசிய அளவில் 23.6 சதவீதமாக இருந்த மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் தமிழகத்தில் 44.8 சதவீதத்தை எட்டியுள்ளது.
அண்ணாமலை பல்கலைக்கழகம்: சமுதாயத்தின் நலிவுற்ற பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களின் நலன் கருதி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை அரசே எடுத்து நடத்த எடுக்கப்பட்ட முடிவு பாராட்டத்தக்கது. இதுவரை இந்தப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.476 கோடி நிதியுதவியாக தமிழக அரசு வழங்கியுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...