வேலுார்: தமிழகம் முழுவதும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்,
பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு, கடந்த, 13 மாதங்களாக சம்பளம்
வழங்காததால், அவர்கள் விரக்தியில் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், பகுதி நேர
துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதிய அடிப்படையில், நியமிக்கப்பட்டனர்.
இவர்களில் பெரும்பான்மையினர், கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், மாதம், 25
ரூபாய் சம்பளத்தில் பணியில் அமர்த்தப்பட்டவர்கள்.
இதில், பெரும்பாலும் வயதான பெண்களே அதிகம். தினக்கூலியை விட, குறைந்த மாத
சம்பளத்துக்கு வேலை பார்த்த இவர்களுக்கு, கடந்த ஆண்டு வரை, மாதம், 715
ரூபாயும், பொங்கல் போனஸாக, 1,000 ரூபாயும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த, 13 மாதங்களாக துப்புரவு பணியாளர்கள், 25
ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சம்பளம் வழங்கவில்லை. மேலும், 2014 முதல்,
2016 வரை மூன்று ஆண்டுகளாக, பொங்கல் போனஸ், 1,000 ரூபாயும்
வழங்கப்படவில்லை. ஒவ்வொரு மாதம் துவங்கியதும், சம்பளம் வந்துவிட்டதா? என்று
துப்புரவு பணியாளர்கள் கேட்கும்போது, அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல்,
தலைமை ஆசிரியர்கள் திணறுகின்றனர். ஒரு சிலர், தங்களது சொந்த பணத்தை
கொடுத்து அனுப்புகின்றனர்.
கடந்த, 13 மாதங்களாக அரசிடம் இருந்து நிதி வரவில்லை. இந்த கணக்கில்
கையிருப்பும் இல்லை. எனவே, துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்படாமல்,
கடந்த, 13 மாதங்களாக நிலுவையிலுள்ள சம்பள பணத்தையும், பொங்கல் போனசையும்
சேர்த்து, பொது நிதியில் இருந்து வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக
அரசிடம் இருந்து நிதி வந்ததும், அதை மீண்டும் பொது நிதியில் சேர்த்துவிட
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...