Home »
» 100க்கும் மேற்பட்ட போலி ஆசிரியர்கள் - சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தீவிரம்
தமிழகத்தில் பல மாவட்டங்களில் போலி
சான்றிதழ்களை கொடுத்து அரசு பள்ளிகளில் பலர் ஆசிரியர் பணியில் பல ஆண்டுகளாக
பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. கடந்த 1991க்கு பின்னர் பணியில்
சேர்ந்த பலரது சான்றிதழ்களை சரிவர ஆய்வு செய்யாததே இதற்கு காரணம்.
கிருஷ்ணகிரி,
தர்மபுரி, சேலம், நாமக்கல், வேலூர் மாவட்டங்களில் மேலும் பல போலி
ஆசிரியர்கள் இருப்பது தெரியவந்தது. கடந்த 4ம் தேதி இந்த 5 மாவட்டங்களில் 40
ஆசிரியர்கள் திடீரென விடுப்பு எடுத்தனர். நேற்று முன் தினமும் 100க்கும்
மேற்பட்டோர் பல இடங்களில் பணிக்கு வரவில்லை. இந்த விவகாரம் கல்வித்துறையில்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் தலைமறைவாகியுள்ளனர்.
பலர் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து
விட்டு சட்டரீதியாக தங்களை பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கையில்
இறங்கியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் ஆசிரியர்களின் சான்றிதழ்களை
சரிபார்க்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி
மாவட்டங்களிலும், கடந்த 15-20 ஆண்டுகளில் பணிக்கு சேர்ந்த ஆசிரியர்களின்
சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த
விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மூவர் தவிர, போச்சம்பள்ளி அருள்சுந்தரம்
என்பவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகளிடம் இருந்து வரும்
தகவல் அடிப்படையில் போலி ஆசிரியர்களை பிடிக்க கூடுதல் தனிப்படைகள்
அமைக்கவும் போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி
விசாரணைக்கு மாற்றுவது குறித்தும் போலீசார் ஆலோசிக்கின்றனர்.
பொதுவாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என பணியில் சேர்ந்தால் அவர்களின் கல்வி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும், காவல்துறை நற்சான்று போன்றவை சம்பந்தப்பட்ட அலுவலகத் தலைவர்களால் கமுக்கமா பெறப்படவேண்டும். ஆனால் நடைமுறையில் மேபடி உண்மைத்தன்மை சான்றிதழ்கள் பணியாளர்களாலேயே (குறிப்பாக ஆசிரியர்களால்) பெறப்படுவதால் இது போன்ற நிகழ்வுகளை தடுக்க முடியாது. ஒரு ஆசிரியர் 10ஆண்டுகள் பணி முடித்து தேர்வு நிலையை அடையும்பொழுது உண்மைத்தன்மை பெறப்படவில்லை என முட்டுக்கட்டை போடும் நிலைதான் உள்ளது. ஒரு அரசு பணியாளர் பணியில் வரன்முறை படுத்துதல் என்பது எந்த அடிப்படையில் நடைபெறுகிறது என்பதே புரியாத புதிராக உள்ளது.
ReplyDelete