Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தள்ளிப்போகும் TET - அடுத்த அடி...

அடுத்த அடி... (வளரூதியம், ஊக்க ஊதியம்)
       ஆசிரியர் தகுதி தேர்வு நிபந்தனைகளுடன் பணியில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களின்  வளரூதியம், ஊக்க ஊதியம் (increments and incentives) முறையான அறிவிப்பு இல்லாமல் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

        கட்டாயக் கல்வி உரிமை சட்ட அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வு ஒவ்வொரு வருடமும் முறையாக நடைபெற்றாக வேண்டும். ஆனால் கடந்த 2½ வருடங்களாக தமிழகத்தில் இத்தேர்வு நடத்தப்படாத நிலையில் TET நிபந்தனைகளுடன் பணியில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களின் முடிவுக் காலம் இன்னும் ஒரு சில மாதங்கள் மட்டுமே உள்ளன என பல ஊடகங்களில் அவ்வப்போது வருகின்றன.

      ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய அறிவிப்பு ஏதும் இப்போதைக்கு வெளியாக வாய்ப்புகள் இல்லாத சூழலில் ஏற்கெனவே மன உளைச்சலில் உள்ள இவ்வாசிரியர்களுக்கு அடுத்த அடியாக வளரூதியம் மற்றும் ஊக்க ஊதியம் சார்ந்த  பலன்களை நிறுத்த தமிழகத்தில் உள்ள பல ஆசிரியர்களுக்கு வாய்மொழி உத்தரவு வந்ததுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

     கடந்த அக்டோபர் மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய வளரூதியம் மற்றும் ஊக்க ஊதியம் முறையான எழுத்துப்பூர்வ அறிவிப்பு இல்லாமல் நிறுத்தம் செய்ததால் இப் பிரட்சனையில் உள்ள ஆசிரியர்களுக்கு இது மேலும் மன சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

         வரும் நவம்பர் 2016 வரை தான் இவர்களின் பணிக்காலம் என்ற கானல் நீர் வாழ்க்கை வாழும் இவர்களின் வளரூதியம் ஊக்க ஊதியம் சார்ந்த அரசாணைகளை முறைப்படுத்தி தர வேண்டும் எனவும் வருமான வரி சார்ந்த முன் தரவுகள் தயாரிப்பு செய்வதற்கு முன்பு இந்த நிலைக்கு தீர்வு காண பட்டதாரி ஆசிரியர்கள் தமிழக அரசிடம் வேண்டுதல்கள் வைக்கின்றனர்.
(தென்னக கல்விக் குழு, கோவை)

Article By Mr. Chandru, Padasalai Reader.




7 Comments:

  1. உங்களை எப்படி தொடர்பு கொள்வது

    ReplyDelete
  2. pls enter ur mobile number

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Sir incentive poda matengra vangida ethna idea kodunga

      Delete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive