Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

SSA - பயிற்சி முக்கியம் பாடம் முக்கியமல்ல!

         அனைவருக்கும் கல்வி இயக்கக திட்டம் என்ற, எஸ்.எஸ்.ஏ., மூலம், 8ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள்; அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் என்ற, ஆர்.எம்.எஸ்.ஏ., மூலம், 9, 10ம் வகுப்பு ஆசிரியர்கள்; மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் மூலம், பிளஸ் 1, பிளஸ் 2 ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் தரப்படுகின்றன.

             மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், செயல்முறை கற்றலை ஊக்குவிக்கவும், இந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சமீப காலமாக, பயிற்சி என்ற பெயரில், கருத்தரங்கு நடத்தி, மதிய சாப்பாடு கொடுத்து, பயண செலவுக்கு, 50 ரூபாயும் கொடுத்து அனுப்பும் சடங்காக, இது நடத்தப்படுகிறது.

           இந்த பயிற்சியை, கல்வி ஆண்டின், முதல் இரு மாதங்களில் முடித்து விடலாம் என்றாலும், ஆண்டு முழுவதும் நடத்தப்படுகிறது. பாடங்களை ஆசிரியர்கள் நடத்தி முடித்த பின் தான், எப்படி பாடம் நடத்த வேண்டும் என, ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது. இந்த பயிற்சியால் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பெரிய பலன் இல்லை என்பதை, சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

இது குறித்து, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:


ஆசிரியர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டு, படுக்கையில் இருந்தாலும், பயிற்சிக்கு கட்டாயம் வர வேண்டும். பாடம் நடத்த வேண்டும் என கூறி, வராமல் இருந்தால், சம்பளம் பிடிக்கப்படும் என, அதிகாரிகள் மிரட்டுகின்றனர். 



சிவகங்கை மாவட்டத்தில் மட்டும், பயிற்சிக்கு வராத, 85 ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளனர். மொத்தத்தில், இந்த பயிற்சியால், மாணவர்களுக்கு சரியான நேரத்தில் பாடங்கள் நடத்த முடியவில்லை. இதனால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தான் பாதிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்





10 Comments:

  1. TRAINING GIVEN BY RMSA AND SSA IS UTTER WASTE FOR THE TEACHERS

    ReplyDelete
  2. இந்த பயிற்சியால், மாணவர்களுக்கு சரியான நேரத்தில் பாடங்கள் நடத்த முடியவில்லை. இதனால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தான் பாதிக்கப்படுகிறது.

    ReplyDelete
  3. School pogum pothu class eduthal pothum nalla result varum..


    ReplyDelete
  4. School pogum pothu class eduthal pothum nalla result varum..


    ReplyDelete
  5. Training ku sariyana nerathuku varanum.athai schools la implement pannuga first results thana varum....

    ReplyDelete
  6. Well said. Training by SSA and RMSA totally utter waste. It is useful only for SSA and RMSA workers

    ReplyDelete
  7. Where they are starting the training in the correct time.அவர்களும் எப்படி நேரத்தை ஓட்டலாம் என்றுதான் பார்க்கிறார்கள். No useful messages

    ReplyDelete
  8. SSA Programme Waste. state goverment gentral Govt. funds vangathan intha SSA programme.

    ReplyDelete
  9. I think Mr S Suresh is a worker of SSA or RMSA. Dont worry you will observe in Sec Edu. without any service loss. Only entrants from Ele. Edn to Sec Edn will loss their service seniority. Because, in the view of Officers Ele. Educational department is slave dept of Sec. Edn. Moreover, Even a single post is allotted to Ele. Edn teachers in SSA. But, in case of RMSA all are belonging from Sec Edn. It proved that the Sec edu is superior to all dept in Education. DEEO, CEO/ACEO, APO, Directors (Ele edn,SEc edn, Library, exams etc), JDs(Ele edn,SEc edn, Library, exams etc), ADs(Ele edn,SEc edn, Library, exams etc), DDs,Supervisors of SSA,BRTES, Coordinators of RMSA and RMSa, all are belonging from SEC. EDUcational dept. ie.all supervisory posts. Only AEEO (not a promotional post, but a transfer post of MIddle HM.) allotted to Ele. EDn.

    ReplyDelete
  10. வருடத்திற்கு 20 நாட்கள் பயிற்சிகளால் தான் நீங்கள் பாடம் நடத்துவது பாதிக்கிறதா? நீங்கள் பொய்யான காரணம் காட்டி ML, CL, RL, OD, இன்னும் பிற இப்படி எடுக்கும் விடுமுறைகளால் மாணவர்களின் கல்வி பாதிக்க வில்லையா? நாம் வாங்கும் ஊதியற்த்திற்கு மனசாட்சிக்கு கட்டுப்பட்டு பள்ளிக்கு சென்று பாடம் நடத்தினாலே போதும் மாணவர்கள் முன்னேறிவிடவார்கள். பணியிடை பயிற்சி என்பது அனைத்து துறை அலுவலர்களுக்கும் புத்துணர்ச்சி அளிக்க கூடியது. அதை முறையாக வந்து கவனிப்பவர்களுக்கு. ஆனால் வேறு வழியில்லாமல் வருபவர்களுக்கும், பொழுது போக்க வருபவர்களுக்கும், வந்தால் ஒரு நாள் ஈடுசெய் விடுப்பு கிடைக்கும் என்பதற்காகவும் வருபவர்களுக்கு் பயிற்சி தேவையற்றதாக தான் தெரியும்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive