புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்களின் மனிதநேயம்....
சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களை புரட்டிப் போட்ட மழை
வெள்ளம் சில மனிதநேயங்களையும் காட்டியுள்ளது..
இக்குழுவின் மூலம் ஆசிரியர்களிடம் தங்களால் இயன்ற தொகையினைத்
தாருங்கள் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அயல் நாடுகளில் பணிபுரியும்
நண்பர்களிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டது.. அதன் மூலம் கிடைக்கப்பட்ட
தொகையில் அரிசி, எண்ணெய், பருப்பு, உப்பு, சேமியா பாக்கெட், குளியல் சோப்,
சலவை சோப், பற்பொடி என 9 பொருட்கள் அடங்கிய நிவாரணப்பை 120000
மதிப்பீட்டில் 250 குடும்பங்கள் பயன்படும் வகையில் ஒரு வார காலத்திற்குள்
தயாரிக்கப்பட்டது. இதனை நேரடியாக வழங்கிட வேண்டுமென முடிவு செய்து,
இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் சதிஷ்குமார் தலைமையில் விராலிமலை சுரேஷ்,
பொன்னமராவதி விவேக், அறந்தாங்கி சுரேஷ் மற்றும் பாலாஜி ஆகியோர் அடங்கிய
ஐவர் குழு கடலூர் மாவட்டத்திற்கு நேரே சென்று அங்குள்ள தண்டேஸ்வர நல்லூர்
மற்றும் கோவிந்த நல்லூர் என இரு கிராமங்களில்க 250 குடும்பங்கள் பயன்பெறும்
வகையில் உணவுப்பைகளை வழங்கி நேரடி களப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அவ்வூர் மக்கள் இந்த ஆசிரியர்களை கண்டு மிகவும் மகிழ்ந்து
வரவேற்றனர். இந்த ஆசிரியர்கள் உதவியை எங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம் என
நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அங்குள்ள கிராமங்களை தேர்வு செய்யவும்
நிவாரணப் பொருட்களை வழங்கவும் அங்குள்ள ஆசிரியர்களும் பத்திரிகை
நண்பர்களும் உதவிகரமாக இருந்ததாக சென்று வந்த உதவும்கரங்கள் ஆசிரியர்
குழுவினர் தெரிவித்தனர். இது போன்ற மக்கள் நலப்பணிகளை ஆசிரியர்கள் தாமாக
முன்னெடுப்பது மக்களிடம் மிகுந்த மகிழ்வை அளிப்பதாக பொதுமக்கள்
தெரிவித்தனர் என்றும் இது போன்ற பணிகள் எப்போதும் தொடரும் எனவும்
இக்குழுவில் தன்னார்வமிகுந்த ஆசிரியர்களை இன்னும் இணைத்து நிரந்தரமாக ஒரு
சமூகக்குழுவாக வலுப்பெற வைப்பதற்கான முயற்சியை எடுக்க உள்ளதாக
இக்குழுவினர் தெரிவித்தனர்.
இக்குழுவின் பணியால் ஈர்க்கப்பட்ட பிற மாவட்ட ஆசிரியர்கள்
தங்களையும் இக்குழுவில் இணைத்துக்கொண்டு சமூக முன்னெடுப்பிற்கான மற்றுமொரு
பணியில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். மக்கள் சேவையில் களம் காணத்
தொடங்கியுள்ள இது போன்ற ஆசிரியர்களின் செயல்பாடுகள் பொதுமக்களிடத்தில்
ஆசிரியர் இனத்தின் மீதான மதிப்பை இன்னும் ஒருபடி மேலே உயர்த்துவதாக
அமைந்துள்ளது.
இதுபோன்ற சேவைகள் தொடர வேண்டும்
ReplyDelete