சுற்றுச்சூழல் மன்றம்
==================
==================
புதுக்கோட்டை மாவட்டம் , திருவரங்குளம் ஒன்றியத்தில்
அமைந்துள்ள காசிம்புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்
சுற்றுச்சூழல் மன்றம் (Eco Club) புதுமையான முறையில் செயல்பட்டு
வருகிறது.
சுற்றுச்சூழல் மன்றத்தை சேர்ந்த மாணவர்கள் ஆசிரியர்கள்
ஒத்துழைப்புடன் பள்ளி வளாகத்தில் பயன்படாத இடத்தை பள்ளித்தோட்டமாக்கி
பல்வேறு காய்கறிகள் மலர்ச்செடிகளை பயிரிட்டுள்ளனர் மேலும் பலன் தரும் மர
வகைகளையும் நட்டு வளர்த்து வருகின்றனர் . அவை தற்பொழுது பலனை கொடுக்க
தொடங்கியுள்ளதால் மாணவர்களும் ,ஆசிரியர்களும் ஊர் மக்களும் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர். காய்கறிகளான பூசணி, அவரை, வெள்ளரி, கத்தரி, வெண்டை
மட்டுமல்லாமல் பல்வேறு மலர்ச்செடிகளையும், வேம்பு, பலா, தென்னை,நாவல்
மரங்களையும் நட்டு பள்ளி வளாகத்தை பசுமை உலகமாக மாற்றிக்காட்டி
அசத்தியுள்ளனர். இத்தோட்டத்திலிருந்து கிடைக்கும் காய்கறிகள் பள்ளியில்
தயாரிக்கப்படும் சத்துணவுக்கு பயன்படுத்திக்கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.
இதன் மூலம் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவது
தடுக்கப்படுவதால் கற்றலில் மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் ஈடுபட வாய்ப்பு
ஏற்படும் . இத்தாவரங்களிலிருந்து கிடைக்கும் தூய்மையான காற்றும் பசுமையும்
கற்றலுக்கான சூழல் இயற்க்கையாகவே உருவாகியுள்ளது. ஒவ்வொரு மாணவருக்கும்
குறிப்பிட்ட செடியை பராமரிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் ஆர்வமுடன்
விடுப்பின்றி பள்ளிக்கு வருகை தருகின்றனர். மொத்தத்தில் சுற்றுச்சூழல்
மன்றம் மாணவர்களின் கற்றலில் புதுமை படைக்க வழிகோலியுள்ளது.
நன்றி
-க.தியாகு பட்டதாரி ஆசிரியர்
ஒருங்கிணைப்பாளர்-சுற்றுச்சூழல் மன்றம்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
காசிம்புதுப்பேட்டை -614624
திருவரங்குளம் ஒன்றியம்,
புதுக்கோட்டை மாவட்டம்.
-க.தியாகு பட்டதாரி ஆசிரியர்
ஒருங்கிணைப்பாளர்-சுற்றுச்சூழல் மன்றம்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
காசிம்புதுப்பேட்டை -614624
திருவரங்குளம் ஒன்றியம்,
புதுக்கோட்டை மாவட்டம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...