வெள்ளத்தினால் இழந்த சான்றிதழ்கள்-ஆவணங்களை எங்கு பெறலாம் என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தின் காரணமாக பொதுமக்கள் இழந்துள்ள நிலம் மற்றும் வீட்டுமனைப்
பட்டா, கல்வி சான்றிதழ், காஸ் இணைப்பு புத்தகம், ஆதார் அடையாள அட்டை,
வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், நிலம்-வீட்டு கிரைய
பத்திரம், ஆட்டோ ஓட்டுனர்கள் இழந்துள்ள லைசென்ஸ் மற்றும் வாகன
பதிவுச்சான்று உள்ளிட்ட சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை திரும்ப வழங்கும்
வகையில் சென்னை மாவட்டத்திலுள்ள 10 வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும்
வரும் 14-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
இதற்காக, மொத்தமாக 132 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில்,
சென்னையில் 54 சிறப்பு முகாம்களும், காஞ்சிபுரத்தில் 34 முகாம்களும்,
திருவள்ளூரில் 29 முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. கடலூரில் 15 சிறப்பு
முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை
* 473, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, (அப்போலோ மருத்துவமனை அருகில்), தண்டையார்பேட்டை.
* 3, ராஜா முத்தையா சாலை, பெரியமேடு (நேரு ஸ்டேடியம் அருகில்), புரசைவாக்கம்.
* 3, பெரம்பூர் நெடுஞ்சாலை, பெரம்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில், பெரம்பூர்.
* 25, யுனைடெட் இந்தியா காலனி, முதல் மெயின்ரோடு, அயனாவரம்.
* 88, மேயர் ராமநாதன் சாலை, சேத்துபட்டு.
* 4, மேற்கு மாடவீதி, கோயம்பேடு, (குறுங்காலீசுவரர் கோவில் அருகில்).
* புதிய எண் 1/பழைய எண் 2, பாரதிதாசன் காலனி, கே.கே.நகர்.
* 370, அண்ணாசாலை, சைதாப்பேட்டை.
* 28, பசும்பொன் முத்துராமலிங்கம் சாலை, ராஜா அண்ணமாலைபுரம்.
* ஐ.ஆர்.டி. வளாகம், 100 அடி சாலை, தரமணி.
காஞ்சிபுரம் மாவட்டம்
* கா.மு.சுப்பராய முதலியார் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்.
* அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, சின்ன காஞ்சிபுரம்.
* பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்.
* அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வாலாஜாபாத்.
* அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, உத்திரமேரூர்.
* அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, திருப்பெரும்புதூர்.
* அரசு மேல்நிலைப் பள்ளி, மொளச்சூர்.
* அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கோவூர்.
* அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, படப்பை.
* அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, குன்றத்தூர்.
* அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருப்பெரும்புதூர்.
* அரசு உயர்நிலைப் பள்ளி, மாங்காடு.
* அரசு மேல்நிலைப் பள்ளி, திருமுடிவாக்கம்
* அரசு மேல்நிலைப் பள்ளி, அய்யப்பன்தாங்கல்.
* அரசு உயர்நிலைப் பள்ளி, முகலிவாக்கம்.
* சி.எஸ்.ஐ. செயின்ட் தாமஸ் மேல்நிலைப் பள்ளி, செயின்ட் தாமஸ் மவுண்ட்.
* அரசு மேல்நிலைப் பள்ளி, பல்லாவரம்.
* அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கிழக்கு தாம்பரம்.
* வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப் பள்ளி, தாம்பரம்.
* அரசு மேல்நிலைப் பள்ளி, சோழிங்கநல்லூர்.
* அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, நந்திவரம்.
* செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு.
* இந்து மேல்நிலைப் பள்ளி, மதுராந்தகம்.
* அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, அச்சிறுப்பாக்கம்.
* அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, செய்யூர்.
* அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருப்போரூர்.
* அரசு மேல்நிலைப் பள்ளி, பொலம்பாக்கம்
* அரசு மேல்நிலைப் பள்ளி, பீர்க்கங்கரணை.
* ஜே.ஜி. நேஷனல் மேல்நிலைப் பள்ளி, தாம்பரம்.
* அரசு மேல்நிலைப் பள்ளி, ஒக்கியம் துரைப்பாக்கம்.
* அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, திருக்கழுக்குன்றம்.
* அரசு மேல்நிலைப் பள்ளி, சேலையூர் .
* அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு.
* அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கடப்பாக்கம்.
திருவள்ளூர் மாவட்டம்
* டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூர்.
* அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளியூர்.
* அரசு மேல்நிலைப்பள்ளி, கடம்பத்தூர்.
* அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பேரம்பாக்கம்.
* அரசு மேல்நிலைப்பள்ளி, கனகம்மாசத்திரம்.
* அரசு மேல்நிலைப்பள்ளி, திருவாலங்காடு.
* அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருத்தணி.
* அரசு மேல்நிலைப்பள்ளி, கே.ஜி.கண்டிகை.
* அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆர்.கே.பேட்டை.
* அரசு மேல்நிலைப்பள்ளி, வெடியங்காடு.
* அரசு மேல்நிலைப்பள்ளி, அத்திமாஞ்சேரிபேட்டை.
* அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பொதட்டூர்பேட்டை.
* அரசு மேல்நிலைப்பள்ளி, பூண்டி.
* அரசு மேல்நிலைப்பள்ளி, பென்னலூர்பேட்டை.
* அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊத்துகோட்டை.
* அரசு மேல்நிலைப்பள்ளி, பெரியபாளையம்.
* இமாகுலேட் மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஆவடி.
* அரசு மேல்நிலைப்பள்ளி, திருமழிசை.
* அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி.
* டி.வி.எஸ். ரெட்டி மேல்நிலைப்பள்ளி, மீஞ்சூர்.
* அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, செங்குன்றம்.
* வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி, திருவொற்றியூர்.
* அரசு மேல்நிலைப்பள்ளி, பாடியநல்லூர்.
* அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, சோழவரம்.
* அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கும்மிடிப்பூண்டி.
* அரசு மேல்நிலைப்பள்ளி, கவரப்பேட்டை.
* அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அம்பத்தூர்.
* அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, போரூர்
* அரசு மேல்நிலைப்பள்ளி, மதுரவாயல்.
இந்த முகாம்களில் தமிழக அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் மத்திய
அரசின் தொடர்புடைய நிறுவனங்களின் அலுவலர்கள் கலந்துகொண்டு,
பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று ஒரு வார காலத்திற்குள் நகல்
ஆவணங்களை கட்டணமின்றி வழங்க உள்ளனர். பொதுமக்கள் இந்த சிறப்பு முகாம்களில்
பங்கேற்று, வெள்ளத்தில் இழந்த சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களின் நகல்
ஆவணங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...