Home »
» வங்கி தேர்வு மையங்கள் அமைப்பதில் தென் மாவட்டங்கள் புறக்கணிப்பு: மன உளைச்சலில் தேர்வர்கள்
தமிழகத்தில் வங்கி தேர்வு பணியாளர் மையம்
(ஐ.பி.பி.எஸ்.,) நடத்தும் மெயின் தேர்வுக்கான மையங்கள் அனைத்தும் வட
மாவட்டங்களில் அமைக்கப்பட்டதால் தென் மாவட்டங்களை சேர்ந்த தேர்வர்கள் மன
உளைச்சலில் உள்ளனர்.தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இணைந்து ஐ.பி.பி.எஸ்.
(இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்சன்) என்ற கூட்டமைப்பை
உருவாக்கி ஆண்டுதோறும் போட்டி தேர்வு நடத்தி, அனைத்து வங்கிகளுக்கும்
தேவைப்படும் கிளர்க்குகளை தேர்வு செய்கின்றன.
ஏதேனும் ஒரு பாடத்தில் இந்தாண்டிலிருந்து முதல்நிலை, மெயின் மற்றும் நேர்காணல் என மூன்று கட்டங்களாக தேர்வு நடத்தப்படுகிறது.
இதன்படி ஜன., 2ம் வாரத்தில் முதல்நிலை
தேர்வு நடந்தது. மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேல் பங்கேற்றனர்.
இதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஜன., 2 மற்றும் 3ம் தேதிகளில் நடக்கும் மெயின்
தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதில் 40 ஆயிரம் பேர் தென் மாவட்டத்தினர்.
மதுரை, நெல்லை, துாத்துக்குடி உட்பட
தென் மாவட்டங்களில் தேர்வு எழுதுவதற்கு மையங்கள் ஒதுக்கப்படும். முதல்நிலை
தேர்வுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் மையங்கள் அமைக்கப்பட்டன. ஜனவரியில்
நடக்கும் மெயின் தேர்வுக்கு தென் மாவட்டங்களில் மையங்கள்
அமைக்கப்படவில்லை.
கோவை, நாமக்கல், காஞ்சிபுரம்,
சென்னையில் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தென் மாவட்ட தேர்வர்கள், பல நுாறு
கிலோ மீட்டர் துாரம் சென்று மெயின் தேர்வை எழுத வேண்டியுள்ளது.
தேர்வர்கள் சிலர் கூறியதாவது: மெயின்
தேர்வுக்கான மையங்கள் வட மாவட்டங்களில் உள்ளன. வெளி மாவட்டம் என்பதால்
தேர்வர்கள் முதல் நாளே சென்று தங்க வேண்டிய நிலையுள்ளது. மெயின் தேர்வுக்கு
மதுரை, நெல்லை மாவட்டங்களிலாவது மையங்கள் ஏற்படுத்த வேண்டும், என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...