இந்த ஆண்டின் மிகக் குறுகிய பகல் பொழுதைக் கொண்ட டிசம்பர் 22ம் தேதி அதாவது
இன்றைய தினம், மாலையில் சூரியன் மிக விரைவாகவே அஸ்தமனம் ஆகிவிடும்.உலகில்
சூரியனின் உதயம் மற்றும் மறைவை கணித்து நீண்ட பகல் பொழுது, குறுகிய பகல்
பொழுது, பகல் - இரவு சம அளவு என ஒரு சில நாட்களை கண்டறிந்துள்ளனர்.
அந்த வகையில் டிசம்பர் 22ம் தேதி குறுகிய பகல் பொழுதைக் கொண்டது என்பதால் இன்று காலை 7.16 மணியளவில் உதித்த சூரியன் மாலை 4.32 மணிக்கெல்லாம் அஸ்தமனமாகிவிடுமாம்.இன்னும் பூமியின் வடக்குப் பகுதிக்கு அருகே உள்ள நாடுகளிலும், பகுதிகளிலும், சூரியன் வெறும் 10 மணி நேரத்துக்கும் குறைவாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இதுவே ஜூன் 21ம் தேதியை எடுத்துக் கொண்டால் அன்று பகல் பொழுது நீண்டு இருக்கும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...