'அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்துக்கும் பொருந்தும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
* டிச., 7ம் தேதி முதல் நடக்கவிருந்த, அரையாண்டு தேர்வுகள், ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது; இது, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என, அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும்.
* குப்பை அகற்றும் பணயில் ஈடுபட்டுள்ள துப்புரவு பணியாளர்களுக்கு, தடுப்பூசி போடப்படும். பாதுகாப்பு முக கவசம், கையுறை, மழை கோட், 'கம்யூட்ஸ்' வழங்கப்படும்
* வெள்ளம் பாதித்த வீடுகளுக்கு, தலா அரை கிலோ பிளீச்சிங் பவுடர், தண்ணீரை சுத்தம் செய்ய, 20 குளோரின் மாத்திரைகள் வழங்கப்படும். மொத்தம், 2,000 டன் பிளீச்சிங் பவுடர்; 1 கோடி குளோரின் மாத்திரைகள் வழங்கப்படும்
* வெள்ள பகுதிகளில் நடத்தப்படும், 1,105 மருத்துவ முகாம்கள் தொடரும்
* மலிவு விலை காய்கறிக் கடைகளில், உருளைக் கிழங்கு, கிலோ, 23 ரூபாய்க்கு விற்கப்படுகிறது; வெளிச்சந்தையில் கிலோ, 45 ரூபாய். எனவே, கூடுதலாக, 100 டன் உருளைக் கிழங்கு, 75 டன் வெங்காயம் கொள்முதல் செய்து, விற்பனை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...