Home »
» பள்ளி எப்போது திறக்கும் என்று ஆவலோடு இருந்தோம்: மாணவிகள் பேட்டி!!
1 மாத விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதால் மாணவ–மாணவிகள்
இன்று உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.
எழும்பூர் மாநில அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 8 மணி முதலே
மாணவிகள் வகுப்புக்கு வரத்தொடங்கினர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தோழிகளை பார்த்த மாணவிகள் ஒருவரையொருவர்
கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக்கொண்டனர். தங்கள் பகுதியில் சூழ்ந்த வெள்ள
பாதிப்புகளை பகிர்ந்து கொண்டனர்.
மாணவி சந்தியா கூறியதாவது:–
நான் பிளஸ்–1 படித்து வருகிறேன். நான் வசிக்கும் சாஸ்திரி நகர் பகுதியில்
மழை வெள்ளம் வீட்டின் தரை தளத்தை சூழ்ந்தது. எங்கள் வீடு மேல்தளத்தில்
இருந்ததால் வெள்ளத்தில் சிக்கவில்லை. ஆனாலும் 6 நாள் வெளியே வர முடியாத
சூழ்நிலை ஏற்பட்டது. வீட்டிலேயே முடங்கி கிடந்தோம்.
வெள்ளம் பாதிப்புகளை டி.வி.யில் நேரடியாக பார்க்கும் போது என்னால் வீட்டில்
இருந்து படிக்க முடியவில்லை. மன அழுத்தத்துடன் இருந்தேன். எப்போது பள்ளி
திறக்கும் என்ற ஆவலே என்னுள் எழுந்தது. இன்று என் ஆவல் நிறைவேறி விட்டது.
சேத்துப்பட்டைச் சேர்ந்த மாணவிகள் சுகன்யா, மகாலட்சுமி ஆகியோர் கூறுகையில்,
"பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டதால் எனது படிப்பு கேள்விக்குறியானது?
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு பாடபுத்தகம், நோட்டு புத்தகம்
போன்றவற்றை அரசு வழங்கி உள்ளது. அதனால் மீண்டும் படிக்க ஆர்வமும்,
உற்சாகமும் ஏற்பட்டு உள்ளது.
எங்களுக்கு சைக்கிளும், லேப்–டாப்பும் வழங்கப்படுவதால் நாங்கள் உற்சாகமாக
இருக்கிறோம். நன்றாக படித்து வெற்றி பெறுவோம்" என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...