சமீபத்தில்,
ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட போது, நாடு
முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் அதிகம்
முணு முணுக்கப்பட்ட பெயர், அசோக் குமார் மாத்துார், 72;
இவர் தான், ஏழாவது சம்பள கமிஷனின் தலைவர். இவர் அளித்த பரிந்துரைகளையே,மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 52 லட்சம் ஓய்வூதியதாரர்களும், இந்த பரிந்துரைகளால் பயன் அடைய உள்ளனர்.
அசோக் குமார் மாத்துார், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். சம்பள கமிஷனின் தலைவராக பொறுப்பேற்ற பின், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர் சங்க பிரநிதிகளுடன் பேசி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
கடும் குளிர் பிரதேசமான லடாக்கிற்கு சென்று, அங்கு பணியாற்றும் ராணுவ வீரர்களுடன் அமர்ந்து, அவர்களின் வாழ்க்கை மற்றும் பணிச்சூழல் குறித்து கேட்டறிந்தார். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று,அங்குள்ள அரசு ஊழியர்களுக்கு, எந்த அடிப்படையில் சம்பள உயர்வு வழங்கப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்தார். இதற்கு பின்னரே, பரிந்துரையை அளித்துள்ளார்.
அசோக் மாத்துார் கூறுகையில், ''என் தாத்தா, தந்தை ஆகியோர், ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக பணியாற்றிவர்கள். அதனால், அரசு ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து, எனக்கு நன்றாகவே தெரியும். சம்பள கமிஷன் பரிந்துரைகளை தயாரிப்பதற்கு, இந்த அனுபவம் தான் எனக்கு உதவியது,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...