இது குறித்து ஆராய்ச்சி செய்த கனடாவின் அல்பெர்டா பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் மேத்யூ டம்பெரி ஆகியோர்,பூமியின் வெப்பம் அதிகரித்து அதன் மூலம் துருவப் பகுதிகளில் உள்ள பனிமலைகள் உருகி வருவதால் கடல் நீர்மட்டம் அதிகரித்து அதன்மூலம் பூமி சுற்றும் வேகம் குறைந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.துருவப் பகுதிகள் உருகி வருவதால்,துருவங்களின் அடர்த்தி குறைந்து வருகிறது அது மட்டுமல்லாது நிலவின் ஈர்ப்பு சக்தியும் குறைந்து வருகிறது.இவை இரண்டுமே பூமியை மெதுவாக சுழலச் செய்வதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.இவ்வாறு பூமி மெதுவாகச் சுழல்வதால் ஒரு நாளின் நீளம் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ள மேத்யூ டம்பெரி அடுத்த நூற்றாண்டிற்குள், ஒரு நாள்பொழுதில், 1.7 மில்லி நொடிகள் நீளும் என கணக்கிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.மேலும் பருவநிலை மாற்றம், கடல் நீர்மட்ட உயர்வு போன்றவற்றின் தாக்கத்தைக் கருத்திற்கொண்டு, கடலோர நகரங்களில், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் அதற்காக, இலட்சக்கணக்கான கோடிகளை செலவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Public Exam 2025
Latest Updates
Home »
» பருவநிலை மாற்றம் காரணமாக பூமி சுற்றும் வேகம் குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் தகவல்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...