டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, வி.ஏ.ஓ., தேர்வு எழுதும் மாணவர்களிடம்
வேலைவாங்கிதருவதாககூறி ஒரு சிலர் பணம் பறிக்கும் முயற்சியில்
ஈடுபட்டுள்ளதாகபுகார் எழுந்துள்ளது. தமிழக அரசு போட்டித் தேர்வுகள் மூலம்
அரசு பணியிடங்களை நிரப்பி வருகிறது. தற்போது குரூப்-2ஏ மற்றும் வி.ஏ.ஓ.,
பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களிடம், மேல்அதிகாரிகள், அமைச்சர்களை தெரியும் எனக்கூறி குரூப்-2ஏ,வி.ஏ.ஓ., வேலைவாங்கித் தருகிறோம் அதற்காக ரூ. 8லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கேட்பதாக புகார் தெரிவிக்கின்றனர். இதில் கிராமப்புற மாணவர்கள்தான் அதிகமாக மூளை சலவை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆயக்குடி இலவச பயிற்சிமைய இயக்குனர் ராமமூர்த்தியிடம் கேட்டபோது, குரூப்-2ஏ, வி.ஏ.ஓ., தேர்வுகள் ஜனவரி, பிப்ரவரில் நடக்க உள்ளது. இத்தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களின் அறியாமையை பயன்படுத்தி சிலர், முக்கிய பிரமுகர்கள் மூலம் வேலைவாங்கி தருகிறோம் என கூறி பணம் கேட்பதாக தெரிவித்தனர். பணிநியமனம் போட்டித்தேர்வு, கலந்தாய்வுகள் மூலம் நடக்கிறது. இதற்காக யாரிடமும் பணம் கொடுக்க வேண்டாம், ஏமாற்றும் நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். பணம் வசூலிப்போர் குறித்து குறித்து போலீசில் புகார் கொடுக்கும்படி மாணவர்களை உஷார் படுத்தியுள்ளோம். இவ்விஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவர்களை ஏமாற்றும் கும்பல் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...