Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பாடம் நடத்தாத ஆசிரியர்கள் விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்'

        சரிவர பாடம் நடத்தாத ஆசிரியர்கள், ஏழு பேரிடம் விளக்கம் கேட்டு, முதன்மைக் கல்வி அலுவலர், 'நோட்டீஸ்' கொடுத்துள்ளார். வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில், தமிழ், ஆங்கிலம் மற்றும் உருது மொழிக்கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது; 21 ஆசிரியர்கள் உள்ளனர்.
         கடந்த ஆண்டு பொதுத் தேர்வில், 10ம் வகுப்பில், 76 சதவீதம், பிளஸ் 2வில், 48 சதவீதம் மட்டுமே, மாணவர்களின் தேர்ச்சி இருந்தது; வேலுார் மாவட்டத்திலேயே மிகக் குறைந்த தேர்ச்சி, இந்தப் பள்ளியில் தான்.சமீபத்தில், இந்த பள்ளிக்கு சென்ற முதன்மை கல்வி அலுவலர் பூபதி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது, அந்த பள்ளியின், ஏழு ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சரிவர பாடங்களை நடத்தாதது தான், தோல்விக்கு காரணம் என, மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூறினர். இதையடுத்து, அந்த ஏழு ஆசிரியர்களுக்கும், 'சரி வர பாடம் நடத்தாதது ஏன்?' என கேட்டு, கல்வி அலுவலர், நோட்டீஸ் கொடுத்துள்ளார். பிற ஆசிரியர்களையும் கண்டித்த அலுவலர், 'வரும் பொதுத்தேர்வில், அதிக வெற்றி பெற பாடுபட வேண்டும்' என, அறிவுறுத்தினார்.




1 Comments:

  1. paadam nadatha veruppam ellatha asiriyargalai velakkam ketka kudathu sir... velaiya vettu thooki eriya vendum. antha edathel pala nalla asiriyargal paniel amartha padavendum. apadi seithu parungal. penbu oruvarum entha madiri porupu ellamal nadanthukolla mattargal. elliyandral entha palliyel sariyaga paadam nadathavelliyo antha palliel pani purium asiriyargalin pilligalai athey palliel serka vendum....

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive