Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அத்தியாவசிய தேவைக்கு வரிசையில் நிற்கும் மக்கள்

         சென்னை :தென் சென்னையில், அத்தியாவசிய தேவை ஒவ்வொன்றுக்கும், நீண்ட வரிசையில் நின்று வாங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. 
 
              கனமழையால், வேளச்சேரி, விஜயநகர், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், நங்கநல்லுார்,மூவரசம்பட்டு, கீழ்கட்டளை உள்ளிட்ட பகுதிகளில், பெரும்பாலான குடியிருப்புகள் வெள்ள நீரில் மூழ்கின. இரண்டு நாட்களாக மின் சப்ளை நிறுத்தப்பட்டது. நேற்று வெள்ள நீர் மெல்ல மெல்ல வடிய துவங்கியது. இரண்டு நாட்களாக, அத்தியாவசிய பொருட்கள் எதுவும் கிடைக்காமல் மக்கள் திண்டாடினர். பால் பாக்கெட்கள் படகுகள் மூலம் சப்ளை செய்யப்பட்டன. அவற்றை மக்கள் நீண்ட வரிசையில் நின்று பெற்று சென்றனர். பெரும்பாலான தெருக்களில் வெள்ள நீர் ஓடுவதால், ஓரம் கட்டப்பட்ட இருசக்கர வாகனங்களை சீர்படுத்த, மெக்கானிக் கடைகள் முன் ஏராளமானோர் வரிசையில்நின்றனர். தொடர் மின் தடையால், இட்லி, தோசை மாவுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. அவற்றை பெறவும் மக்கள் வரிசையில் நின்றனர். பிரட், முட்டை உள்ளிட்ட பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive